பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/275

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

263


மரபல்ல. அதுவும் கிட்டத்தட்ட தேவை இல்லாத ஒரு உயிர்க் கொலை தான். ஆதலாலே, செடி, கொடிகளுக்கும் உயிர் உண்டு என்று நம்புவது அதுதான்.

வேடிக்கையாகப் பாரதி கேட்டான். உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நம் நாட்டிலெல்லாம் அநாதைப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அநாதைப் பிள்ளைகளுக்கு விடுதிகள் கூட இருக்கின்றன. அநாதைப் பிள்ளைகள் இருப்பதைப் போல, எங்காவது அநாதைத் தென்னை மரங்கள் இருக்கின்றனவா? இல்லை! அநாதை மாமரம்? இல்லை. பார்த்தீர்களா? அநாதைத் தென்னை மரம் இல்லை; அநாதை மாமரம் இல்லை. ஆனால், அநாதைப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அப்படியென்றால், செடி, கொடிகள் நம்மைவிட வளர்ந்திருக்கா? இல்லையா? வளர்ந்திருக்கிறது! பாரதி கேட்டான் "வகைவகையாக நிற்கும் செடி, கொடி மரங்கள் யாது தொழில் செய்து பிழைத்தல் அறியா” வரிசை, வரிசையாகத் தென்னை மரத்தைப் பார்க்கிறோம்; வேலி போடுகிறோம் தண்ணீர் ஊற்றுகிறோம்; மரம் வைக்கிறோம்; பாதுகாக்கிறோம்; நாம் என்னென்ன வேலை செய்கிறோம். ஒருவரைக் கேட்டால் நான் 'காண்ட்ராக்டர்' என்கிறார். இன்னொருவர் நான் 'ஆசிரியர்' என்கிறார். இன்னொருவர் நான் மிலிட்டரியில் இருக்கிறேன் என்கிறார். இப்படி ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்கிறார்கள்.

இரண்டு தென்னை மரங்களைப் பார்த்து "என்ன வேலை செய்கிறாய்?" என்றால், அது என்ன சொல்லும்? அதற்கு வேலை, கொடுக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வது; அதைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டு பாளை விடுவது; காய்ப்பது; ஏன் காய்க்கிறது? மக்களுக்காக, எந்தத் தென்னை மரத்திலாவது தேங்காய் பறித்தவுடன், பத்து, இருபது பேர் பக்கத்திலே நின்று கொண்டு, 'இப்படி நான்கைந்து