பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

265


இலட்சியம் என்று வாழ ஆரம்பித்தால் மனிதர்கள் உலகத்திலும் நிச்சயமாக நன்றாக இருக்கலாம்?

உலகத்திலே வேறு எங்கே பூட்டும், சாவியும் இருக்கிறது; மனிதன்தான் நிறைய பூட்டும் சாவியும் உற்பத்தி செய்கிறான். அரசின் சிறையில் சாவி காவலர் கையில் இருக்கிறது; நம் வீட்டைப் பூட்டின சாவி நம் கையில் இருக்கிறது. எப்படியும் பூட்டு பூட்டுத்தானே! சில பணக்காரர்களுடைய வீட்டில் வாயிலைப் பூட்டி விட்டுக் காவல்காரன் வெளியில் இருப்பான். நியாயமாகப் பார்த்தால், இரவில் அந்தக் காவல்காரன் கையிலே அவர்கள் சிறைக் கைதிதான்; வேறொன்றுமில்லை. ஏனென்றால், அவன் பூட்டைபூட்டி, சாவியைக் கையிலே வைத்துக் கொண்டிருப்பான். அவன் நாளைக்குப் புரட்சிகரமாக மாறி, 'உன்னை வெளியில் விடமாட்டேன்' என்று சொன்னாலும் சொன்னதுதான், கம்பன் இவ்வாறு கனவு கண்டான். "கள்வனும் இல்லை; காவல் செய்வாரும் இல்லை" என்று சொன்னான்.

அன்பாக இருப்பது இலட்சியம் என்று சொல்ல வேண்டும் இப்பொழுது, நமது அறங்காவலர்கள் எல்லாம் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் இவ்வளவு நெருக்கமாக இருப்பதை இன்னொரு நிர்வாகக் குழு உறுப்பினர் பார்த்தால் சும்மா இருப்பாரா? "என்ன! கோடி வேலுவிடம் இந்தத் தர்மலிங்கம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரே! குமரன் ஏன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்" என்று ஆராய்ச்சி செய்வார். உடனே பக்கத்திலே இருப்பவர் சும்மா இருக்கமாட்டார். "ஏதாவது காரணம் இல்லாமல் இருக்குமா?” என்பார்? இப்படி நாம் அன்பாக இருப்பதென்பது ஒரு சுய நலம் என்ற மனப்போக்கு நாட்டிலே, மனித சமுதாயத்திலே வளர்ந்தாகிவிட்டது.

'சைவசமயம்' என்று சொன்னால் அது அன்புச் சமயப் அதனால் 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பில்லை' என்றார்.


கு-XV. 18.