பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எங்கே பார்த்தாலும் சைவ சமய வரலாற்றிலே பார்த்தால் "அன்பின் பிழிவு, அன்பின் நெகிழ்ச்சிதான்." ஒரு சிறிய கதை சொன்னால் அன்புக்கு எவ்வளவு அருமைப்பாடு என்பது தெரியும். திருப்பனந்தாள் என்று தமிழ்நாட்டிலே ஒரு திருத்தலம் இருக்கிறது. அந்தக் காலத்தில் ஆணோ, பெண்ணோ விரும்புகிறவர்கள் போய் பெருமானுக்குப் பூப்போட்டுக் கும்பிடலாம் என்பது பழங்கால விதிமுறை. இடைத்தரகர்கள் வருவதற்கு முன்பு இருந்த முறை. ஒரு அம்மையார் தினந்தோறும் வீட்டில் நல்ல பூவை எடுத்துத் தொடுத்துக் கொண்டு போய் ஒரு மாலை போட்டு சாத்தி விட்டு வணங்கிவிட்டு வருவார்கள். தடாதகைப் பிராட்டியார் என்று பெயர். ஒரு நாள் மாலை போடப் போகிற நேரம்! கடவுள் விளையாட நினைக்கிறார். கடவுள் நம்மோடு விளையாட ஆரம்பித்தால் நன்றாக விளையாடுவார். அவர் விளையாட வர வேண்டும். அவர் வருவதற்குத் தகுதியாக நாம் ஆகிவிட்டால், அதற்குப் பிறகு அவர் நம்முடன் நன்றாக விளையாடுவார்; போராடுவார்; சண்டைபோடுவார்; சாப்பிடுவார். எல்லாம் செய்வார். அவர் கற்பனைப் பொருள் அல்ல.

ஆனால், கடவுள் என்ன செய்வார்? சிறிது சோதித்துப் பார்ப்பார். இப்பொழுது நான் நினைத்தேனே! எட்டு மணி வரையில் உங்களைப் பேச வைத்துவிட்டு 8.45 மணி வரை கேட்க வைத்து நீங்கள் அலுவல்களுக்குப் போகிறீர்களா? இல்லையா? என்று நினைத்தேனல்லவா? அது போல, சிவபெருமான் என்ன செய்தார்? அந்த மாலையை எடுத்து சாத்தப் போகிற நேரம் பார்த்து இடுப்பிலிருந்த புடவையை நெகிழச் செய்கிறார். கையில் மாலையை எடுத்து சுவாமிக்குப் போட வேண்டும். புடவை இடுப்பில் நெகிழ்கிறது; அவிழ்கிறது. இப்பொழுது மாலையைப் போடுவதா? மாலையைக் கீழே வைத்துவிட்டு மானத்தை மறைக்க புடவையைக் கட்டுவதா? கேள்விக்குறி வந்தாயிற்று. ஒரு