பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

267


வினாடிதான் இந்த சிந்தனை. தன்னிடத்திலே அளவுகடந்த நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்ட பக்தர்கள் வாழ்க்கையில் வினாக்கள் கேட்கப்பட்டால், பிரச்சனைகள் வந்தால், அதற்கு முடிவு காண்கிற பொறுப்பு கடவுள் எடுத்துக் கொள்வாரே தவிர இவர்களிடம் விடுவதில்லை. அதை எல்லா இடத்திலேயும் பார்க்கலாம்.

பிரச்சனைகளைக் கடவுளிடம் விட்டுவிட்டால், அவன் சுலபமாக முடிவு எடுத்து விடுவான். இப்பொழுது நமக்குக் கடவுளிடம் விட விருப்பம் கிடையாது. கடவுளிடம் பிரச்சனையை விடாமல் நாமாக எடுத்துக் கொண்டு போய், "நாமாக ஜோசியரிடம் கேட்டு, அவன் எட்டுக் குழப்பம் குழப்பி, பின் புத்தி சொல்வதற்காக அவனிடம் ஆலோசனை கேட்டு, எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி நம்மைப் பைத்தியக்காரனாக்கி விடுவான். பிரச்சனை என்றால், நீ கடவுள் நம்பிக்கை உடையவன் என்றால் நீ கடவுளிடம் விட்டுவிடு. உடனே இந்த அம்மையார் பார்த்தார்கள். கடவுள் நம்பிக்கை வந்தாகி விட்டது. கடவுள் பார்த்தார். புடவை கீழே விழுந்து விடக் கூடாது. மாலையைப் போடவில்லை என்றாலும் அந்த அம்மையார் வருந்துவார்கள் என்று சொல்லி, அந்தத் திருமேனி உருவம் உடனே குனிந்து, அந்த எக்கிய நிலையிலேயே மாலையைப் போடக் கூடிய அளவுக்கு அந்தத் திருமேனி குனிந்து கொடுத்தது. திருமேனி குனிந்து கொடுத்தவுடனே அந்த அம்மையார் எக்கிய நிலையிலேயே மாலையைப் போட்டு விட்டுத் தற்காத்துக் கொண்டார்கள்.

அப்படிக் குனிந்த சுவாமி நீண்ட நாள் நிமிரவே இல்லை. இந்தச் செய்தி சோழனுக்கு எட்டியது. சோழன் நாட்டிலே, சுவாமி. இப்படிக் குனிந்திருக்கக் கூடாது என்று நிமிர்த்த முயன்றான். சங்கிலிபோட்டு யானையைக் கட்டி, குதிரையைக் கட்டி இழுத்து சுவாமியை நிமிர்த்த முயன்றான். சுவாமி நிமிரவில்லை. இந்தச் செய்தி இப்படியே பரவுகிறது.