பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

269


காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறாள் ஒன்றை மறந்து விடாதீர்கள். நீங்கள் உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிற வரையில் கடவுள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பார்; வரவே மாட்டார்; ஓர் உதவியும் செய்ய மாட்டார். நம்மால் முடியாது என்று ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தால் கடவுள் வருவார். ஏனென்றால், தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுத் தொல்லைபடுத்தமாட்டார். அது ஒரு மிகவும் நடுநிலைமையான ஒரு நிலை, உயிர்களின் மன நிலை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான்.

பாஞ்சாலி முதலில் கையை இடுப்பில் பிடித்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தாள். "கண்ணா, கண்ணா” வென்று, கடைசிச் சுற்றுதான் மீதி. இனி நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று தெரிந்து கைகளைத் தலைமீது தூக்கி, "கண்ணா" வென்று கத்தியவுடனே புடவை நீண்டது. அதுதான் நாம் கோவிலுக்குப் போனால் கைகளைத் தலைமீது குவித்துக் கும்பிடுவது என்பது. அதன் பொருள் என்னவென்றால், என்னுடைய முயற்சியினால் என்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொள்ள முடியவில்லை. என்னுடைய பிரச்சனைகளைத் தீர்வு காண முடியவில்லை. 'கடவுளே நீ உதவி செய்' என்பதின் அடையாளம் தான் கைகளைத் தலைமீது தூக்கி வணங்குகிற பழக்கம்.

ஒரு கடற்கரைக்குப் போகிறோம். நீச்சல் குளத்திற்குப் போகிறோம். ஒருவன் நீந்திக் கொண்டிருக்கிறான். கை மேலே நீள்கிறது. கரையிலே நிற்கிற நாம் என்ன நினைப்போம்? நீந்துகிறான் என்று தான் நினைப்போம். அவன் உடலெல்லாம் தெரியாமல், கழுத்து வரை உள்ளே போய் கைமட்டும் மேலே தூக்கினால், நீந்தவில்லை போலிருக்கிறது. கீழே விழுந்து விட்டார். சரி கீழே இறங்கித்துக்கு என்று சொல்லுவோம். அதுபோல, வாழ்க்கையில் அவிழ்ந்து விடுவோம் போல் இருக்கிறது. என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற