பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/282

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்வு என்றைக்குத் தோன்றி நம்முடைய கைகளைத் தலைமீது குவித்து வணங்கிக் கூப்பிடுகிறாமோ, அப்பொழுது இறைவுன் வெளி வந்து உதவி செய்வான். அதுவரையில் செய்யக் கூடாது என்பதல்ல. அவரவர் முயற்சியும், அறிவும், திறமையும் பயன்பட்டு வருகிற பொழுது நாம் ஏன் வீணாக வரவேண்டும் என்றுதான் இறைவன் வருவதில்லை. அதனால்தான் "சிரங்கு விவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க" என்று மாணிக்கவாசகர் சொன்னார். எனவே கடவுள் நம்மிடத்திலே அன்பு மயமானவர்.

அவர் உன்னிடத்திலே கேட்பதெல்லாம் அன்புதான். நாம் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்றெல்லாம் தருகிறோமே, அதை அன்போடு தருகிறோமா? சிலபேர் அன்பைத் தவிர மற்றதெல்லாம் கடவுளுக்குக் கொடுப்பார்கள். சூடம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் எல்லாம் தட்டிலே இருக்கிறது. தேங்காய் மூடி வரும்வரை காத்துக் கொண்டிருப்பார்கள். தவிர, அன்பைத் தரமாட்டேன் என்கிறார்கள். அது கூடாது. கடவுளுக்குத் தேவை நம்முடைய இதயபூர்வமான அன்புதான். அந்த அன்பிலே சிலர் "அப்பா” என்று கூப்பிடுவது தான் ஆசைப்படுகிறார் அவருக்கும், உனக்கும் உறவு வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். அவரை நீ பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார். ஆனால், இப்பொழுது உபயம் என்று சொன்னால், ரூபாய் ஆயிரம் அல்லது ஐநூறு கொடுத்தால் தான் என்று சொன்னால் நாம் கோயிலுக்கு உபயம் செய்துதான் கடவுளின் அன்பைப் பெறவேண்டுமென்பதில்லை. நீ ஒன்றுமே கொடுக்க வேண்டாம் நீ வந்து தூரத்திலே நின்று பார்த்துவிட்டு "அப்பா" என்று அன்பாகக் கும்பிட்டுப் போனால் கூட அவருக்கு மிகவும் திருப்தியாக இருக்கும். ஆகவே, காசு, பணத்தால், பொருளால் கடவுளின் அன்பைப் பெற நினைப்பது தவறு. கடவுள் என்ன 'லஞ்சம்' வாங்குகிறவரா என்ன? 'லஞ்சம்' வாங்கிக் கொண்டு அருள்