பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/290

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிலர் பரந்த நோக்கத்தில் மொழி என்பது கருத்தைத் தெரிவிக்கத்தானே? அது எந்த மொழியாக இருந்தால் என்ன? மொழியை வைத்து வாதாடக் கூடாது என்று சொல்லுகிறார்கள். மொழி கருத்தைத் தெரிவிக்கும் சாதனம் என்பதைவிட மொழிதான் கருத்தையே உருவாக்கத் துணை செய்வதால் மொழி விழியைப்போல் போற்றப்பட வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.

வழி வழியாக வளர்ந்திருக்கின்ற தமிழ்ச் சமுதாயத்தைப் பார்க்கின்றபோது, அதனுடைய இலக்கியச் சிறப்பு, மற்ற எல்லாச் சிறப்புக்களையும் பார்க்கும்போது, மொழி சமுதாயத்தின் ஊற்றுக்கண்கள்போல இருந்து வருகிறது.

இரண்டு கால்களும் இடைக்காலத் தமிழகத்தில் நொண்டியாகப் போய்விட்டன.

ஒரு கால் தாய்மை உலகம். இன்னுமொரு கால் தாய் மொழி. இந்தத் தாய்மை உலகத்தை இடைக் காலத்தில் அடிமையாக்கினோம். •

அதுபோலவே, தாய்மொழி ஆட்சி மொழியாகாமல் வேற்று மொழி ஆட்சியில் இருந்தது. ஆட்சியில் தமிழ் இல்லை. இசையரங்கிலும் தமிழ் இல்லை. ஆலயத்திலும் தமிழ் இல்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் போராடி ஆட்சிமொழி பயிற்சிமொழி என்று சொல்லுகிறோம்.

கோயில் வழிபாட்டை எடுத்துக் கொண்டால் தமிழிலும் வழிபடும் உரிமை வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

இந்த எண்ணங்களைப் பார்க்கும்போது என்னுடைய வழிவழிப் பரம்பரையினர் நினைக்கின்றார்கள். எனக்கு இரண்டு மொழிகளும் கண்கள் போலத் தேவையானவை. சமய உலகம் மொழிச் சிக்கலுக்குள் சிக்கக் கூடாது என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.