பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

279


ஓரளவு மனித குலத்திற்குப் பரந்த பண்பாடு தேவை தான். ஆனாலும் தற்கொலை செய்துகொள்ளுகிற அளவிற்குப் பரந்த பண்பாடு இருப்பது நமக்கு நல்லதல்ல.

கவிஞர்கள் புலவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தனி மனிதனுக்கு ஊறு வரும்போது அவன் பொறுமை காட்ட வேண்டியது இன்றியமையாத ஒன்று. தனி மனிதனுக்குக் கேடு வரும்பொழுது அமைதியாக இருப்பது தேவையான குணங்களில் ஒன்று. ஆனால் நாட்டிற்கும், இனத்திற்கும் ஊறு வரும்பொழுது பொறுமையோடு இருக்க வேண்டும் என்றால் வாழ்ந்த பரம்பரை வீழ்ந்து போகும்.

என்னை ஒருவன் இழிவுபடுத்தினால் பொறுமையாக இருக்க முடியும்; அது பண்பாடும்கூட.

ஆனால் என் மொழியை, மொழிவழி நாகரீகத்தைப் பழித்துப் பேசும்போது பொறுமையாக இருந்தால் மானமற்றவன் என்றுதான் பொருள்.

இது சமய உலகத்திற்குக்கூட இன்றியமையாத ஒன்று என்று வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்.

அந்தச் சமயம்-அந்தச் சிந்தனை வழியாகப் பிறக்கின்றது அனுபவ வாழ்க்கை.

அறிவைத் தொட்டு உணர்வைத் தொட்டுத் தாய்மொழி ஆணை புரிவதுபோல் இன்னுமொன்று துணை செய்ய முடியாது.

பொதுவாக ஆங்கிலத்தைப் பயில இந்தியைப் பயில ஆசிரியர்கள் தேவையில்லை. ஆனால் தமிழைப் பயில வேண்டுமானால் இலக்கண முறையோடு படிக்கவேண்டுமென்றால் ஆசிரியர் தேவைதான்.

ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், பேசட்டுமே தெரிந்தவர்கள், கவிதைகளைக் கேட்டால் எழுச்சி பெறுகிறார்கள்! அவர்களுக்கு எழுதப் படிக்கத்