பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தெரியாது என்றாலும் இன எழுச்சிக்கும் தாய்மொழி இன்றியமையாதது.

தமிழ் காலத்தால் மூத்ததாக, இந்த வையம் கையசைத்த காலத்திலேயே பையப் புலவர் நாவில் தவழ்ந்து பழகியது என்பார் கவிஞர்.

அந்தக் கவிஞனின் கருத்து இன்றியமையாத ஒன்று. உலகத்தின் பல்வேறு இலக்கியங்களை-வரலாறுகளை ஆராய்ந்து பார்க்கும்போது, மற்ற இனங்கள் மொழிவழிப்பட்ட காலத்திற்கு முன்பே தமிழ் வளர்ந்திருந்தது.

இதற்குச் சான்றாகச் சொல்ல வேண்டுமானால் தமிழுக்கு உள்ள இனிமையும் எளிமையும் உலகத்தில் வேறு எம்மொழிக்கும் இல்லை என்று கூறலாம். இந்த இனிமையும் எளிமையும் தமிழுக்கு எப்படி வந்து சேர்ந்தது?

இதனோடு தகுதியாக வைத்து எண்ணக்கூடிய பழமையுடையதாக வட மொழியைச் சொல்வார்கள். அதற்குக்கூட இல்லாத ஒர் எளிமை, இனிமை தமிழுக்கு எப்படி வந்து சேர்ந்தது என்று பார்க்கவேண்டும்.

கண்ணை மூடிக்கொண்டு பண்டு தொட்டே தமிழுக்கு இனிமையும் எளிமையும் இருந்தது என்று சொல்லத் தயாராக இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கவிஞர்கள், புலவர்கள், நாவில் பழகி பழகித் தமிழ் இனிய, எளிய மொழியாக உருவாகியிருக்கிறது. அதனால்தான் தமிழுக்கென்று இனிமையிருக்கிறது. தமிழ் காலத்தால் மட்டுமல்ல கருத்தாலும் மூத்ததாக இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மனிதனுடைய குறைகளைப் பார்த்து அவனைத் திருத்திப் பக்குவப்படுத்தத் தேவையான அளவில் தமிழ் வளர்ந்திருக்கிறது. மனித மனத்தைப் பக்குவப்படுத்தும் திறன் அதற்கு உண்டு. தமிழனிடத்திலே ஒரு பெருங்குறை உண்டு. சீக்கிரமாக ரசிப்பான். ஆனால் சீக்கிரமாகச் செயல்பட மாட்டான். கவிதைகளை நன்றாகக் கேட்பார்கள்; மிக நன்றாக