பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/294

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தெரியாது. வந்ததற்குப் பின்னே போய்விட்டுப் போகிறது; பரவாயில்லை என்று பச்சாதாபம் பேசுவார்கள்.

இதனால் தமிழர்கள் தங்கள் சொந்த மொழிக்காகப் போராடவேண்டி இருக்கிறது.

நம்முடைய தமிழ் காலத்தாலும் கருத்தாலும் மூத்தது என்று இருக்கின்ற உணர்வை நாம் பெருக்கவேண்டும். இவைகள் எல்லாவற்றையும் நாம் நீண்டகால நினைவில் வைத்துக் கொண்டு செல்வதால் பயனில்லை.

இன்றைக்குத் தமிழ் வளர்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்று தமிழ் ஆர்வம் பொங்கித் ததும்புகிறது. கங்கையைப்போல் காவிரியைப்போல் பொங்கித் ததும்புகிறது என்று சொல்கிறார்கள். உண்மையில் நடைமுறையில் அப்படியிருக்கிறதா? உண்மையிலேயே தமிழ் ஆர்வம் கங்கையைப் போல்-காவிரியைப்போல் பொங்கித் ததும்பி வழிந்தோடுகிறதா? அப்படி ஓடுவதாக நான் கருதவில்லை. தமிழர் தமிழரைப் பார்த்தால் தமிழில் பேசுவது குற்றம் என்று கருதுகின்றனர். தமிழில் கோயில்களில் வழிபாடு செய்ய வேண்டியது என்ன அவசியம்: வடமொழியில் செய்யலாம் என்று பெருமையாகக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள்.

இன்றைக்குத் தமிழ் ஒரே ஒரு துறையில்தான் வளர்ந்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

அதுவும் பேசும் படத்துறையில் . வளர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

கலை, வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் கலையே வாழ்க்கையாகிவிடுமா என்று தோன்றுகிறது.

கலை தேவைதான், வேண்டாம் என்று சொல்ல வில்லை. அடிமைப்பட்டு நொந்து, செத்துக்கொண்டிருக்கிற சமுதாயத்தின் வாழ்க்கை முழுவதும் கலையாக்கி