பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

283


விடுவோமேயானால், அதில் மகிழ்ந்து கடமைகளை மறந்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

கலை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் தமிழகம் இந்தத் துறையில்தான் முன்னணியில் வந்திருக்கிறது. சில பொழுது படிக்க, சில பொழுதில் தூக்கி எறியக் கூடிய கதைகளை, புத்தகங்களை எழுதுவதிலேயே நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

இதைவிட்டு இன்று தமிழுக்கு என்ன தேவை என்பதைத் தமிழ்ப் பெருமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உலக அரங்கிலே வானவெளிக்குச் செல்லுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம். வானவெளியில் சென்று அண்ட உலகத்தைச் சுற்றிவரலாம் என்ற காலத்தில் வாழ்கிற நாம், இந்தக் காலத்தில் இந்த நாட்டில் தாய்மொழியில் அறிவியலைச் சொல்லிக் கொடுக்கலாமா கூடாதா? என்ற ஆராய்ச்சியில் இருப்பதைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது! வேதனையாகவும் இருக்கிறது.

இன்றைக்கு ரஷ்யப் பேரறிஞன் வானவெளிக்குச் செல்கிறான். அமெரிக்க அறிஞன் வானவெளியைச் சுற்றி வருகிறான்.

இந்தக் காலத்தில்-இந்த நூற்றாண்டில் தமிழ் இளைஞர்கள் படிக்கின்ற கல்லூரிகளில் தமிழில் அறிவியலைப் போதிப்பதுபற்றி இன்னமும் சிந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அது வேதனைக்குரியதாகவே இருக்கிறது.

நாம் கங்கைக் கரையிலிருந்து நீர் எடுத்துவந்த பரம்பரை என்பது உண்மைதான். ஆனால் இந்த நூற்றாண்டில் அவைகள் சில பொழுது படித்து எழுச்சி பெறப் பயன்படும்.

ஆனால், நம்முடைய நாட்டில் தமிழ் வளர்ச்சி என்றால் அறிவியல் மொழி, பொருளியல் மொழியாகவும், தொழிலியல் மொழியாகவும் ஆக்க முயற்சி செய்யவேண்டும்.