பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

285


அதுதான் திருக்குறள் என்று சொல்லவேண்டும். அந்த நூலை இந்தியப் பேரரசு இந்தியாவின் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

எப்படி தேசத்திற்கென ஒரு தேசியக் கொடியும், தேசத்திற்கென ஒரு தேசிய பண்ணையும், தேசிய மொழியும் தேவையோ அதுபோல ஒரு தேசிய நூல் தேவை என்று கார்லைல் என்ற பேரறிஞர் சொல்கிறார். இந்தியாவுக்குத் தேசிய மொழி வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கும் பேரரசு இந்தியாவிற்குத் தேசிய நூல் வேண்டும் என்று விரும்பித் திருக்குறளை ஏற்றுக் கொண்டால், இந்த நாட்டில் திருக்குறள் வழிப்பட்ட எண்ணம், சிந்தனை வாழ்க்கை வளரும். அதன் வழியாக இந்தியாவின் ஒற்றுமையை வளர்க்க முடியும்.

இநதியாவின் தேசிய நூலாக இருக்கும் தகுதி படைத்த ஒரே நூல் திருக்குறள்தான்.

இக் கருத்துக்களை எண்ணத்தில் வைத்துச் சொல்லும் போது, திருக்குறள் தமிழ் மக்களிடையே அறிமுகம் செய்யப் படவில்லையென்றால் நம் முயற்சி வெற்றி பெறாது. தமிழ்ப் பெருமக்கள் தாங்கள் தமிழர்கள் என்று எண்ணுவதற்கு அடையாளமாக ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள் இலக்கியப் பயிற்சி குடும்பப் பயிற்சியாக மலர வேண்டும். அதன் வழிப்பட்ட எண்ணமுறைகள், வாழ்க்கை முறைகள் வளரவேண்டும்.

தமிழர்கள் என்றால், ஒரு குடும்பம் என்றுதான் பெயர். அந்த நோக்கத்தில்தான் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று பாடினான். ஆனால் அவனோடு பிறந்து வாழ்கிற தன்னைச் சார்ந்த ஒரு தமிழனிடத்தில் கூட கருத்து முரண் பாடு வந்துவிட்டால் காழ்ப்பாக மாற்றிக் கொள்கிற கேட்டை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். அந்த எண்ணத்தைப் பார்க்கும்போது, தமிழன் இன்று போதுமான அளவு