பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/303

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

291


இன்று நம்மிடையே நிலவுகின்ற இலக்கியங்கள் பெரும்பான்மையும் கடைச் சங்கத்தைச் சார்ந்தனவேயாம். தமிழ்ச் சங்கங்கள் இக்காலத்துப் பல்கலைக் கழகங்களைப் போன்றன. மாணவர்கள் இருக்க, படுக்க, உண்ண, உடுக்க முதலிய எல்லா வசதிகளையும் பெற்று வந்தார்கள். அதாவது அவை குருகுல வாசம் (Residential University) சங்கங்களாக இருந்தன. இச் சங்கங்களில் சீனா, காந்தாரம், எகிப்து, பாபிலோனியா, அக்கேடியா, அமெரியா, பாரசீகம், இலங்கை முதலிய இடங்களிலிருந்தும் மாணவர்கள் படித்துச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது. நாலந்தா, தக்க சீலம் முதலிய ஆரிய நாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஏற்படுவதற்குப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் தமிழ்ச் சங்கங்கள் நடைபெற்று வந்தன என்பதற்கு வடநாட்டு நூல்களிலேயே ஆதாரங்கள் உள்ளன. சங்கம் என்ற சொல் தமிழ்ச்சொல் அன்று. அதனால் தமிழ்ச் சங்கம் என்பதற்குச் சரியான சொல்கிடையாது. ஆதலால் வடநாட்டு நாலந்தா, தக்கசீலம் முதலிய சங்கங்களைப் பார்த்துத்தான் தமிழ்ச் சங்கங்கள் தோன்றின என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.

"கதநபம" என்னும் அவைந் தெழுத்தும், எல்லா உயிரோடும் செல்லுமார் முதலே. "சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே", "அவை ஒள எனும் ஒன்றலங் கடையே”' என்றிருக்க வேண்டிய தொல்காப்பியச் சூத்திரம், பிழைபட்ட முறையில் இரண்டு சூத்திரங்களாகப் பிரிக்கப்பட்டு "அ, ஐ, ஒள எனும் மூன்றலங் கடையே” என்று பதிப்பிக்கப்பட்டுள்ளதேயாம். இன்னோரன்ன கருத்துக்களைக் கொண்டு தமிழ் மிக மிகத் தொன்ன்மயான மொழி என்பதையும் முன்மொழி என்பதையும் துணிந்து கூறமுடிகின்றது. தலைமையாய் அமைந்த தனி இயற்பிதா மொழி என்பது பேரிசைச் சூத்திரம், காலத்தில் முதுமொழியாயினும் ஆற்றலில், வளத்தில், இன்பத்தில், இளய தமிழாகவே-கன்னித் தமிழாகவே விளங்குகின்றது. முன்னைப்