பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/336

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

என்று நயத்தக்க நாகரிகம் பேசிய வள்ளுவர் பிறந்தநாடு அன்றோ நமது நாடு? எனவே நஞ்சினையும் உண்டு வாழ்ந்தார் நமது ஞானத் தலைவர் அப்பரடிகள்.

மனிதன் ஒரு சொரி சிரங்கு பிடித்தவன் போல; அரிப்பு ஏற்பட்டபோது சொரிந்து கொள்வான்; சொரியும் போது சுகமாக இருக்கும். பின்னர் எரிச்சல் ஏற்படும். அவ்வாறு எரியெடுத்ததும் இனிமேல் சொரியக்கூடாது என்று தனக்குள் எண்ணிக் கொள்வான். பின்னர் ஊரல் ஏற்படும்போது அதை மறந்து சொரிய ஆரம்பித்துவிடுவான். அது போலவே பலர் அன்பு, அருள் என்று படிக்கும்போது அன்பும் அருளும் காக்கவேண்டும் என்று எண்ணிக் கொள்வார்கள்; அடுத்த நேரமே அவற்றை மறந்து விடுவார்கள். இத்தகைய பண்பு, வாழும் மனித சமுதாயத்திற்கு நல்லதல்ல. நாம் கற்கவேண்டும்; கற்ற நெறியில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் வழுக்கலும், இழுக்கமும் ஏற்படும்போது ஊன்றுகோல் போல நின்று உதவுவது திருக்குறள். வீட்டிலும், நாட்டிலும் குறள் மணம் கமழ வேண்டும்; குறள் வாழ்வு மிளிர வேண்டும்.

விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டுக் கிடந்தது நமது பாரத தேசம். இந்த நாட்டு மக்கள் ஊமையராய்... செவிடர்களாய்... உணர்வின்றி நெடுமரம்போல் வாழ்ந்தார்கள். ஆதிக்கக்காரர்களும் சவாரி செய்வதற்கு இலாயக்காகக் கூனிக் குறுகி வாழ்ந்தார்கள். வாழ்க்கையில் வளம் இல்லை. ஆனால், வறண்ட வேதாந்தங்கள் உண்டு. மண்ணகத்து வாழ்வுபற்றிய அறிவு சூன்யம்; ஆனால் விண்ணகத்தைப் பற்றி ஆயிரமாயிரம் கற்பனைகள், எண்ணற்ற சமயங்கள். ஆனால் கிராமத்தில் அருளாட்சி இல்லை. அகத்திலும் புறத்திலும் இருளாட்சி செய்த காலம். இருள்கடிந்து