பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமுதாயத்தை அன்பியல் தழுவிய-உறவோடு கலந்த ஒரு குடும்பமாக ஆக்குவதில் முயற்சித்து வெற்றிபெறுதல் வேண்டும்.

தேசிய ஒருமைப்பாட்டின் அடித்தளம் கிராமச் சமுதாய அமைப்பிலேயே இருக்கிறது.

இந்தியா என்றால் கிராமம்; இந்திய நாட்டின் இதயம் கிராமங்கள். இந்திய நாட்டின் எண்பது விழுக்காடு மக்கள் கிராமங்களிலேயே வாழ்கின்றார்கள். அவர்களிற் பெரும் பாலோர் வேளாண்குடி மக்கள். அவர்களால் உண்பிக்கப் பெறுவோர் பலர். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னிருந்த நிலைதான். இதை எண்ணிப் பார்க்கவும் நெஞ்சம் குமுறுகிறது. உழைப்பவர் வாழ்க்கையில் சோர்வு, உழைக்காதவர்கள் நகரங்களில் "வெளிச்சம் போட்டு” வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாதி ரீதியான ஆதிக்கம்-சமுதாயத்தை அட்டைபோல் உறிஞ்சி அலைக்கழிக்கச் செய்யும் நிலப் பிரபுத்துவமுறை ஆகியவைகளால் வலிவும் வனப்பும் வளமும் இழந்துபோன கிராம வாழ்க்கைக்குப் புத்துயிரூட்டியது நாம் பெற்ற சுதந்திரம். வேளாண்குடி மக்கள் உழைப்பில் நியாயமான பங்குபெற வழிசெய்தது ஏன் ? அண்ணல் காந்தியடிகள் சொன்னதுபோல, உழவர்களுக்கு உழும் நிலத்தில் உரிமை கிடைக்கும் வண்ணம் நிலச் சீர்திருத்தத்தைக் கொணர்ந்து, இத்தகு புதிய சாதனைகள் விவசாயிகளிடத்தில் எழுச்சியைத் தந்திருக்கின்றன-தன்னம்பிக்கையைத் தந்திருக்கின்றன-உற்பத்தியைப் பெருக்கியிருக்கின்றன.

நமக்குத் தெய்வசாநித்யம் தெரியுமோ தெரியாதோ, ஆனால் எண்ணற்ற தெய்வங்களைப்பற்றி நமக்குத் தெரியும் ஆனால், பாரினில் வாழ்ந்திட மட்டும் கற்கமாட்டோம். நமது பாட்டன் பூட்டன்கள் ஏடெடுத்தடுக்கிப் பூசித்தனர். ஏடு கிடைக்காதவன் ஆயுத பூசையின் பெயரால் மண்வெட்டியும்