பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வழிச் சிந்திப்பதைவிடக் கருத்துவழிச் சிந்திப்பதுதான் சிறந்தது. கருத்து வழி மனிதர்களைச் சிந்திக்கப் பழக்கி விட்டால், காலப்போக்கில் எந்தக் கருத்து நல்ல கருத்தோ அந்தக் கருத்து மக்கள் மனத்தில் தேங்கி நிலைபெற்றுவிடும். எனவே, ஆத்மாவைக் கருத்துவழிச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்றே நாம் எண்ணி முயற்சி செய்கின்றோம். இதைத்தான் சமயமும் வலியுறுத்துகின்றது. பொதுவாக எவர் பேசினார் என்பதுதான் முக்கியம். வாய்ப்பும் வசதியும் இருக்குமானால் கருத்தைச் சொல்லும் மனிதரைப் பாராட்டலாம். மனிதரைப் பாராட்டுவது என்றால் படம் திறந்தோ, நினைவுச் சின்னம் எழுப்பியோ, விழா நடத்திப் பூசனை செய்வதோ அல்ல. அவர் சொன்ன வெளியிட்ட அருமையான கருத்துக்களை வாழ்க்கையில் ஏற்றி நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான்.

திருவள்ளுவர் ஒரு கருத்துப் புரட்சிக்காரர். அவர் காண விரும்பிய சமுதாயம் கருத்து வழிபட்ட சமுதாயம். அவர் சமுதாயத்தைப் பார்த்த முறை வேறு. வளர்ந்து வருகிற தமிழ்ச் சமுதாயத்திற்கு வாழ்க்கை நூல் செய்தார் அவர் வள்ளுவர் என்பதை வள்ளும் என்றே நாம் குறிப்பிட விரும்புகின்றோம். காரணம், கருத்து வழிச் சிந்தனை வேண்டும் என்பதையே நாம் வற்புறுத்துகின்றோம். வள்ளுவத்தில் கவிதை நயம் இல்லை, கற்பனை இல்லை, பொய் இல்லை, புனைந்துரை இல்லை. வள்ளுவத்தின் மையக் கருத்து வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை.

நமது நாட்டைப் பொறுத்தவரையிலே, கொள்ளிடக் கரையிலே கிடக்கின்ற மணலைக்கூட எண்ணிவிடலாம் போலிருக்கிறது. குவிந்து கிடக்கின்ற சாதிகளை எண்ண முடியாது. சாதி என்பது நம்மைப் பிடித்து ஆட்டி அலைக் கழித்துக்கொண்டு வருகிற ஒரு தொத்து நோய், வள்ளுவமோ, சாதி வேறுபாடற்ற-ஒருகுல சமுதாயத்தைக் காண