பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/348

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்று நம்மிலே பலருக்கு, அடுத்தவன் அவன் வாழ்வில் என்ன தப்பு பண்ணுகிறான் என்பதுதான் தெரிகிறதே தவிர, அடுத்தவனுக்கு என்ன நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிவதில்லை. நாலுபேர் கூடுகிற இடத்தில் நாம் எதை எண்ணிச் சிந்தித்து பேசுகிறோமோ, அதுதான் பெரும்பாலும் நடைமுறைக்கு வருகிறது. எனவே, அவ்வாறு நாலுபேர் கூடுகிற இடத்தில் நாம் நல்லனவற்றையே எண்ணி, நல்லனவற்றையே சிந்தித்து, நல்லனவற்றையே பேசவேண்டும்.

மனிதன் வயிராற உண்ணவேண்டும்; அதே நேரத்தில் கிடைத்ததை உண்டுவாழத் தன்னைத் தயார்செய்து கொள்ள வேண்டும். சுவையுணவுதான் பிடிக்கும் என்று பேசக்கூடாது. சுவையுணவுகளைப் பற்றிச் சமய இலக்கியங்களிலும் பேசப்படுகின்றன. ஆனால், சுவையுணவுபற்றிப் பிடிவாதம் பிடிக்கலாமா? மருந்துக்கு குடிக்கலாம் என்றால், குடியிலேயே மயங்கிக் கிடப்பதா? காதல், வாழ்வுக்கு நன்மை பயப்பது என்றால், பரத்தையர் வழிபட்டு மயங்கிக் கிடப்பதா?

திருவள்ளுவர் காணவிரும்பிய சமுதாயம் "ஒப்புயர் வற்ற சமுதாயம்”-உலகப் பொதுமை காக்கும் சமுதாயம். குடிகாரனைக்கூட மன்னித்துவிடலாம்-சமுதாயத்தைச் சுரண்டி வாழ்பவனை மன்னிக்கவே முடியாது. தனித்தனி ஒழுக்கத்தைவிடச் சமுதாய ஒழுக்கம் சிறந்தது என்றுதான் வள்ளுவர் பேசுகிறார். "தான் இன்பத்தை அடையாமல் அடைய விரும்பாமல் செயல் முடித்தல் ஒன்றினையே விரும்புகிறவன் தன் சுற்றத்தவரின் துன்பத்தை நீக்கி, அதனைத் தாங்கிக் கொள்ளுகின்ற துரண்போலாவான்" என்றார் வள்ளுவர். இன்று, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற ஒருலக-ஒரே குல சமுதாயம் காணும் முயற்சியில் மனித சமுதாயம் ஈடுபட்டிருக்கிறது. எனவே, மனித சமுதாயத்தில், மனித குலத்தில் யாருக்கும் துன்பம்