பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

337


ஏற்படாமல் காக்க-துன்பம் துடைப்பதும், நமது கடமை என்று ஒவ்வொருவரும் எண்ணவேண்டும்.

நாம் நம்மை வள்ளுவன் சாதி என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகின்றோம். பழமையையும், புதுமையையும் இணைத்து ஒரு பாலம் கட்டவே நாம் ஆசைப்படுகின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தோன்றிய வள்ளுவர், நாடுவாழ நல்லபல கருத்துக்களைத் தந்தார். எனவே அவர் கருத்தின் வழித் தாயாகவும், தந்தையாகவும் விளங்குகிறார்.

12. மேதை வள்ளுவனும்
போதி மாதவனும்

வள்ளுவரும் புத்தரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்கள். இந்த நாடு எப்படி இருக்கவேண்டும்? சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வள்ளுவர் எழுதிய நூல்தான் திருக்குறள். இப்பெரு நூல் நம் நாட்டில் இருக்கின்ற பெருமை நமக்குண்டு. அது தவிர நம்முடைய பண்பாட்டிலே, நடைமுறையிலே திருக்குறள் வாழ்வு மலரவில்லை.

புத்தர் சொன்னதையே வள்ளுவரும் சொல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். இதை நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், சாதி, விடாமல் நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அது புத்துயிர் பெற்றிருக்கிறதே தவிர குறையவில்லை. இருபதாம் நூற்றாண்டில் கூட சாதி இருந்தால்தான் சமூகங்கள் வளர முடியும் என்று கூறுகிற கட்சிகளும் இருக்கின்றன. சாதி முறையினால் தமிழர்கள் எவ்வளவு ஏமாந்து போனார்கள் என்று பார்க்கவேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர், அதற்கு முன்னே சங்ககாலப் புலவர்கள் 'யாதும் ஊரே,