பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

339


சாப்பிடுகிறேன். என்னைப் பார்த்து உயிர் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?” என்பான் அவன். திருவள்ளுவர் உடனே, "இவை எல்லாம் உன் உடம்புக்கு உயிர் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. ஆனால் உன் உயிருக்கு உயிர் இருக்கிறதா? உயிருக்கு அன்பு என்ற உயிர் இருந்தால் நீ இரக்கப்படுவாய். இன்னொருவன் துன்பத்தைக் கண்டு இரங்குவது "அறிவினாலாவதுண்டோ?” என்பார்.

நொண்டியின் துயரமும், குஷ்டரோகியின் துயரமும் தான் புத்தரின் துறவுக்குக் காரணமாக இருந்தன. பிறர் துன்பத்தைக் கண்டு கண்டு கவலைப்பட்டவர்கள் இந்தப் பெரியவர்கள். புத்தர், இராமலிங்கர், திருவள்ளுவர் ஆகியோர் இந்த வழிவந்தவர்கள். புத்தர் தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர் அல்லர். ஆனாலும் தமிழ் நாட்டில் ஓர் அற உணர்ச்சி - அன்பு உணர்ச்சி புத்தர் காலத்திற்கு முன்பே அரும்பிவிட்டது. இருந்தாலும் வளர முடியாமல் இருந்தது. "உயிர்களிடத்தில் அன்புகாட்டு; கருணை காட்டு; அதுவே ஒழுக்கம், கடவுள் நெறி என்ற கொள்கை. அதுவேதான் வள்ளுவர் கொள்கை. ஆனால் நடைமுறையில் என்ன பார்க்கிறோம்? கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை மனிதனிடத்தில் செல்வாக்குப் பெற்றன. காலப் போக்கில் பணரீதியாக ஆதிபத்தியம் செய்ய நினைத்தவர்கள் கடவுளை, மதத்தை தங்களுக்கு ஏகபோகமாக ஆக்கிக் கொண்டார்கள் அதனால் பணக்காரன் புண்ணியம் செய்தவன்; ஏழை பாவம் செய்தவன். அது அவனவன் தலை விதி என்று சொல்லத் தொடங்கினார்கள். இதனால் நாட்டில் மதத்தின் பெயரால் தப்பும் தவறும் ஏராளமாக நடக்கத் தொடங்கிவிட்டன. இன்று நாம் சோஷலிச சமுதாயம் காண விரும்புகிறோம். திருடனும் காவற்காரனும் இல்லாத சமுதாயத்தைக் காண விரும்புகிறோம்.

நம் நாட்டில் இன்று கணக்கெடுத்துப் பாருங்கள். திருவள்ளுவரைப் பற்றித் தமிழ்நாட்டில் நல்ல விளம்பரம் செய்கிறார்கள்.