பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/353

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

341



ஆகவே, முதல் திருடன் சேமித்தவன். இரண்டாவது திருடன்தான் திருடன். இதைத்தான் காந்தியடிகள் சொன்னார். தனக்குத் தேவையானது தவிர சேமித்து வைத்திருக்கிறவனும் திருடன்தான் என்றார் காந்தியடிகள். நமக்கு அறிவும் பண்பாடும் வந்துவிட்டதால் சமவாய்ப்புச் சமுதாயத்தை உருவாக்கவும் எல்லோருக்கும் உடுக்க உடை உண்ண உணவு கொடுக்கவும் வேண்டும். அப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்றால், "இல்லை இல்லை இது தர்மத்திற்கு ஆபத்து” என்று புதுக்குரல் கொடுக்கிறார்கள். மூன்றும் மூன்றும் ஆறு பேரும் வாழ்ந்தால் நாடு வாழ்ந்துவிடுமா? கடவுள் தர்மம் ஆகியவற்றின், பெயரால் பணக்கார உணர்ச்சியை ஏகபோக உணர்ச்சியை உருவாக்கும் முயற்சி மதத்திற்கு விரோதமானது. மனிதனை மனிதனாக வாழவைப்பதுதான் மதம். வள்ளுவர், புத்தர், இராமலிங்கர் வழியில் செல்லும் நாம். சிறுவர்கள் இளமையில் கல்வி பெறவேண்டும். அதுதான் கடவுள் நெறி; பண்பாடு என்று கூறுகிறோம். வள்ளுவரும் புத்தரும் உலகத்தை நேசி, அன்பு காட்டு. அதுவே மனித தர்மம் என்றார்கள். அந்தக் கொள்கைகையை வீடு வீடாகப் பரப்பவேண்டாமா? அந்தக் கொள்கை வீடு வீடாகப் பரவினால் வக்கீல்களுக்கு நாட்டில் செல்வாக்கு இருக்குமா? அல்லது சினிமாக்களுக்குத்தான் செல்வாக்கு இருக்குமா? புத்தர் வள்ளுவர் கொள்கைகளைத் தமிழகம் என்று உணர்கிறதோ அன்றுதான் நாடு வளரும்.

இந்தத் தலைமுறையில்தான் நாம் பெரும் புரட்சி செய்திருக்கிறோம். கடந்த தலைமுறைவரை படிப்பிற்கும் கூட சாதி தேவைப்பட்டது. கொஞ்சநாள் பணம் தேவைப்பட்டது. சாதியின் காரணமாகவே சிலர் கெட்டிக்காரர்களாகவே பிறக்கிறார்களாம். ஆனால், குடும்பச் சூழ்நிலைதான் படிப்புக்குக் காரணம். நம்மவர்கள் வீட்டிலே படிப்புக்குரிய சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது. பாரம்பரியமாகத் தாய்