பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/359

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

347


என்பது திருக்குறள்.

அடுத்து, இல்வாழ்வு மேற்கொண்டுள்ள ஒத்த மனமுடைய மணமக்கட்கு அன்பு வேண்டும்-அறம் வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார். மறந்துங்கூட அவர் அறிவை வலியுறுத்தவில்லை-அறிவு இன்றியமையாத தேவை என்ற கருத்திலே வேறுபாடு இல்லை. ஆனாலும்கூட,

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

என்றே திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார். அறிவின் முயற்சியிலே பொருளீட்டுகிறார்கள்-அறிவின் முயற்சியாலே என்னென்னவோ செய்கிறார்கள். ஆனாலும் திருவள்ளுவர் இதனையும்கூட ஒப்புக்கொள்ளவில்லை.

"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரளி விடல்”

என்று குறிப்பிடுகின்றார் பொருள் செயல் வகை என்ற அதிகாரத்தில், அன்போடு வாராத பொருளை நீ வைத்துக் கொள்ளாதே-இழந்துவிடு என்றே சொல்லுகின்றார்கள். பொருட்பாலிலும்கூட அவர் அன்பு நெறியையே வலியுறுத்து கின்றார். .

அடுத்து, அரச இயல்பு கூறவந்த திருவள்ளுவர், "எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும்" என்று கூறுகின்றார். எண்பதத்தான் என்பது அன்பினாலேயே வருகின்ற இனிய தண்ணளி, தொடர்ந்து,

"குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
இடிதழீஇ நிற்கும் உலகு"

என்கின்றார் திருவள்ளுவர். ஆம் குடிகளைத் தழுவிப் போ! தழுவிக் கோலோச்சு என்று கூறுகிறார். வெறும் அறிவால்