பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தீண்டாமை முதலியன. இவர்களுடைய மூளை வளர்ந்திருந்தது. இதயம் விரிவடையவில்லை. இத்தகைய அறிஞர்கள் ஆதிக்கக்காரர்களிடம் சோரம் போனார்கள்! அடிமையானார்கள். ஆதலால், ஒருசாராரின் ஆதிக்கத்தை - நிலப்பிரபுத்துவத்தைக் காக்கத் துணை போனார்கள்! அதனாலன்றோ துரோணர், ஏகலைவனுக்கு வில்வித்தையாகிய கல்வியை 'ஏகலைவன்’ என்ற ஒரே காரணத்திற்காகக் கற்றுத்தர மறுத்துவிட்டார்! ஆனால், ஏகலைவன் ஆசிரியரைப் பாவனை செய்து கற்றுக்கொண்டு விட்டான். இதிலிருந்து புலனாகும் ஒரு செய்தி, கல்விக்கு ஆசிரியர் இருந்தால் நல்லது. இல்லையானாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்பதாகும். இந்த முறையின் வளர்ச்சிதானே இன்று குறிப்புக்கள் (Notes) மூலம் கற்றுத் தேர்வது! அதுமட்டுமல்ல. அறிவுச்சேதம் ஏற்படக்கூடிய அளவிற்குக் குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சி அளித்தல், இலவச மதிப்பெண்கள் அளித்துத் தேர்ச்சி அளித்தல் ஆகிய முறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன! இவையெல்லாம் கல்வியின் தரத்தைக் குறைப்பது மட்டுமல்ல, மானுடத்தின் எதிர்கால வரலாற்றையே பாழாக்கும் என்பதை உணரும் நாள் எந்நாளோ?

ஆரம்பக் கல்வி

இன்றைய நாளில் உயர்நிலைக் கல்விக்கு அதிக முதலீடு செய்கிறோம். அதாவது அடிப்படையைக் கவனிக்காமல் மேல்நிலைக் கட்டடங்களைக் கட்ட முயற்சி செய்கின்றோம். இன்று ஆரம்பக் கல்வி - அதுவும் கிராமப் புறங்களில் ஆரம்பக் கல்வி படுமோசமாகி வருகிறது. ஒரு குழந்தை, கருவுற்ற எட்டாவது மாதம் முதல் எட்டாவது வயது வரை சீராகப் பேணப் பெற்றால், கல்வி வாயில்கள் வழங்கப் பெற்றால் எந்தக் குழந்தையும் வளரும்; நன்றாக வளரும்; அறிவாளியாக வளரும். ஆரம்பப் பாடசாலைக்