பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/360

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மட்டும் விவாதம் பண்ணிக்கொண்டிருக்கிற எந்த மன்னனும் நாட்டு மக்களைத் தழுவிப் போக முடியாது, தரணியாளும் மன்னனிடத்துக் குடிமக்கள் எதிர்பார்ப்பது தலையளிதான். குடை எப்படி வெயிலின் வெப்பத்திலிருந்து மனிதனைக் காப்பாற்றுகிறதோ, அப்படியே அரசனுடைய தண்ணளி-அரசனுடைய அன்புக் கருணை, இந்த நாட்டு மக்களைத் துன்பங்களினின்றும் துயரங்களினின்றும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே மன்னனிடத்தே குடை இருக்கிறது.

"துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு”

என்கின்றார் திருவள்ளுவர். இந்த விரிந்த உலகம், வான்மழை பொய்த்தால் வறண்டு விடுவதுபோல, மன்னனுடைய தண்ணளி இல்லாத போனால் அந்த மன்னனின் ஆட்சியின் கீழ் உள்ள நாடு கெட்டுப்போய் விடும் என்கிறார். இங்கும் திருவள்ளுவர் அன்பு நெறியைத்தான் வலியுறுத்துகின்றார்.

அடுத்து,

"படைகுடி, கூழ்அமைச்சு, நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”

என்கின்றார் திருவள்ளுவர். இவற்றில் அறன் ஒன்றைத் தவிர ஏனைய ஐந்தும் அன்பின் வழிபட்டவை தாமே! பொதுவாக ஒர் அரசனிட்த்திலே படைகளுக்கு அளவு கடந்த அன்பும் பற்றும் இருந்தால்தான் அந்த அரசனுக்காக அவர்கள் போர்க்களத்தில் நின்று போராடி உயிர் துறப்பார்கள். அவர்களுக்கு மன்னனிடத்து அன்பும் பாசமும் இல்லையானால், அவர்கள் போர்க்களத்திற்குப் போவதுபோலப் போய் வேறெங்காவது தூங்கிவிட்டு முகாமை மாற்றானுக்குக் கொடுத்துவிட்டும் வந்துவிடுவ்ர்க்ள். அரசன் என்றும்