பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/361

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

349


படைகள் என்றும் வேற்றுமை பாராட்டாத உறவு கலந்த வாழ்க்கை முறை தேவை.

அடுத்து, நட்பு உலகம். நட்பும் அன்பினால் பெறக்கூடிய ஒன்றுதான். அதற்கடுத்து, நற்குடிப் பிறந்தாரின் இயல்புகள் என்று திருவள்ளுவர் ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார். அஞ்சாமை, அறிவு, ஈகை, ஊக்கம் இவை நற்குடிப் பிறந்தாரின் இயல்புகள் என்கின்றார். இவற்றில் ஈகை அன்பு வழிபட்டது என்கிறார் திருவள்ளுவர். காட்சிக்கு எளியனாக இருத்தல் வேண்டும்.

"காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்"

அறிவுடையவர்களோ, தம்மை நாடி வருகின்றவர்களின் தரம், தகுதி முதலியவற்றை ஆராய்வார்கள். வந்திருக்கிறவன் பெரிய மனிதனா? சின்ன மனிதனா? படித்தவனா? படிக்காதவனா? வறியவனா? செல்வச் சீமானா என்பவற்றையெல்லாம் பார்ப்பார்கள்-ஆராய்வார்கள். ஆனால், அன்புடையவர்களாக இருப்பவர்கள் இந்தத் தரம், தகுதி, வேறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் ஆராய மாட்டார்கள். காட்சிக்கு எளியனாக இருப்பவன் தன்னை நாடி வந்திருப்பவன் ஒரு குடிமகன்-அவனிடத்து அன்பு காட்ட வேண்டியது தன்னுடைய கடமை என்று கருதி அன்பு காட்டுவான். இந்த உணர்ச்சி அன்பினால் வரக்கூடியதே யன்றி, அறிவினால் வரக்கூடியதன்று.

'இன்சொல்லால் ஈத்தளிக்க வல்லாற்கும் தன்சொலார் றான்கண் டனைத்திவ் வுலகு.'

என்கிறார் திருவள்ளுவர். 'இன்சொலால் ஈத்தளிக்கவல் லார்க்கு' என்று சொல்லுகின்றார். இனிய சொல்லாலே கொடுத்துக் காப்பாற்றுகின்றவர்களை இந்த உலகம் புகழ்ந்து