பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/364

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொழுது, ஒன்றை மிகுதிப்படுத்தியும் இன்னொன்றை அடுத்த படியில் வைத்துப் பேசுகின்றார். அப்படிப்பட்ட குறட்பாக்கள்,

'அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை'

என்பதும்,

'அவிசொரிந்து ஆயிரம் வேட்டவின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று'

என்பதும் ஆகும். அவிசொரிந்தாயிரம் வேட்டல் என்பது அறிவுநெறி. இப்படிச் செய்தால் என்ன பயன் கிடைக்கும் என்று கணக்கிட்டு எண்ணிப்பார்த்து, சுருதிப்படி சாத்திரப்படி செய்வது அறிவுநெறி. ஆனால், ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை அன்புநெறி-இந்நெறிதான் சிறந்தது; மேலானது என்பது திருவள்ளுவர் கருத்து.

மேலே கூறிய இரு குறட்பாக்களின் செய்திகளும் நமக்கு நிறைவான செய்திகள். இதனை எதிர்க்கட்சியினர் இரண்டொன்றைக் கூறி மறுப்பார்கள். "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று சொல்லிவிட்டார்.

'இன்மையுள் இன்மை விருந்தோரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை'

என்று சொல்லிவிட்டார்; இவற்றாலெல்லாம் அவர் அறிவு நெறியைத்தானே மிகுதியும் வலியுறுத்தியுள்ளார் என்று கேட்பார்கள்.

'கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லா தவர்'

என்ற குறட்பாவை எடுத்துக் காட்டுவார்கள். கண்ணோட்ட மில்லையானால், அது கண் அல்ல-புண் என்று உணரப்படும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அடுத்து,