பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/365

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

353


அதிகார முறைவைப்பைப் பார்த்தாலும்கூட, அன்பு நெறியை வற்புறுத்துகிற அதிகாரங்கள், அன்பினால் விளைகின்ற உணர்ச்சிகள், பண்பாடுகளை வலியுறுத்துகிற அதிகாரங்கள் நிறைய இருக்கின்றன - இவற்றாலெல்லாம் வள்ளுவர் மிகுதியும் வலியுறுத்திய அன்பு நெறியே என்று அறியலாம்.

இயற்கை உலகியலில் ஏதோ ஓர் ஒழுங்கிருக்கிறது. அந்த ஒழுங்கு ஆண்டாண்டுக்காலமாக மாறவில்லை. அந்த ஒழுங்கை மையமாக வைத்தே மனித உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரோரு வழி அந்த ஒழுங்கு தவறும் பொழுதுதான் விபத்துக்கள் தோன்றுகின்றன. விபத்துக்களின் விளைவாக அழுகை தோன்றுகிறது.

இயற்கையில் உள்ள ஒழுங்கைவிட மனித குலத்தில் ஒழுங்கு சற்று அதிகமாகவே இருத்தல் வேண்டும். காரணம் இயற்கை நியதியின்பாற்பட்டது. மனிதன் அதற்கும், மேலாக அறிவு, அன்பு ஆகிய ஒழுங்கின் நிலைக்களன்களாகிய உணர்வுகளைப் பெற்றவன். ஆனால் இன்றோ, ஒழுக்க நடையும் தளர்ந்து வருகிறது அவ்வழி ஒழுங்கும் நிலை பெறவில்லை. ஏன் இந்த நிலை? ஒழுக்கம் ஒழுங்கு ஆகியவைகளையும்கூடப் பரந்த நிலையில் இயல்புகளுக்கேற்றவாறு நோக்காமல் சிறிய எல்லைக்குட்பட்ட தன்னல நோக்குடனேயே நிர்ணயிக்கத் தலைப்பட்டுவிட்டார்கள். இன்று ஒருவர் ஒழுக்கமென்று கூறுவது பிறிதொருவருக்குத் துன்பமாகவும், தொல்லையாகவும் இருப்பதைக் காண்கின்றோம். இந்த அவல நிலைக்குக் காரணம், மனித குலத்திடையே ஒருமைப்பாட்டுணர்வு வளராமையேயாம். அவ்வழிப்பட்ட அன்பும் அரும்பி மலரவில்லை. மனமாற்றத்திற்கு அடிப்படையான கருத்துப் புரட்சியும் ஏற்படவில்லை.

ஒழுக்கத்தினின்று ஒழுங்கு தோன்றுகிறது. இது தொடக்கநிலை; அறிவுநிலை, பின் ஒழுங்கிலிருந்து ஒழுக்கம்