பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/369

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

357


"நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

என்கிறார்.

"நோய் முதல் நாடி” என்று குறிப்பிடுகிறார். "மூல நோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்” என்பது தமிழ்மறை. ஆசிரியர்கள் மலர்களில் கையாளும் மென்மையை விட அதிக நுணுக்கமாக மாணவர்களை-மாணவர் மனங்களைக் கையாளவேண்டும் அவர்களின் உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்க வேண்டும். எனினும் தன் திசையில் செல்ல அனுமதிக்கக் கூடாது. அப்படியானால், தடை செய்வது என்று பொருள் அல்ல. அவர்களை நல்வழிப்படுத்துதல் வேண்டும் இதனைத் திருமூலர் "மடை மாற்றல்” என்று குறிப்பிடுவார். உணர்ச்சி களை அடக்கமுடியாது-ஆனாலும் அந்த உணர்ச்சிகள் பற்றிப் படர்கின்ற கொழுகொம்புகளை மாற்றிவிடுவதின் மூலம் சீர் செய்ய முடியும். போர் செய்யும் உணர்ச்சி இயல்பிலேயே மனிதனுக்கிருக்கிறது இந்த உணர்ச்சியைத் தன்னலத்திற்காக-தன் உற்றார் உறவினர்களோடு போரிடும் வகையில் வளராமல் தடுத்துத் தீமையை எதிர்த்துப் போராடும் போருணர்ச்சியாக வளர்க்கலாம்-வளர்க்க வேண்டும். உழவர்கள் நிலத்தின் இயல்பைத் தெரிந்து கொண்டாலே சிறந்த விவசாயிகளாகிறார்கள். அதுபோல ஆசிரியர்கள் குழந்தைகளின் மன இயல்பைத் தெளிவாகப் புரிந்து கொண்டாலே நல்லாசிரியர்களாகத் திகழமுடியும். நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு உரமிடப்படுதல் போல குழந்தைக்ளின் மன இயல்புக்கு ஏற்றவாறு நல்ல கருத்துணர்வுகள் வழங்கப் பெறுதல் வேண்டும். உடல் நலத்திற்கு ஏற்ற உணவுகள் கிடைக்காதபோது, உடல் நோய்வாய்ப்படுவது போலவே, மனநலத்திற்கேற்ற கருத்துண்வுகளும் கிடைக்காதபோது ஒழுக்க உண்ர்வுகளும் தளரத்தான் செய்யும். அதனைப் பருவ்