பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

25


கல்வி ஐந்தாவது வயதிலிருந்து தொடங்குகிறது. கிராமப் புறங்களில் 2-5 வயதுவரை குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பில்லை. நகர்ப்புறங்களில் மாண்டிச்சோரி பள்ளி, கிண்டர்கார்டன் என்று இருக்கின்றன. கிராமப்புறக் குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளிக்கும் முற்பட்ட முதல்நிலை ஆரம்பக் கல்வி நிலையங்கள் (Pre Elementary School) திறக்கவேண்டும். இப்போது இயங்கிவரும் முதலமைச்சர் சத்துணவு மையங்களை அப்படியே முதல்நிலை ஆரம்பப் பாடசாலையாக அமைக்கலாம். நிதிப்பொறுப்பு அதிகம் வராது. அடுத்து ஆரம்பப் பாடசாலைகளில் இன்றுள்ள ஆசிரியர், மாணவர் விகிதங்கள் 1:60, 70, 90, 100 என்ற அளவில் எல்லாம் இருக்கின்றன. இங்ஙனம் ஆசிரியர் - மாணவர் விகிதம் இருப்பது கல்வியியல் நெறிமுறைக்கு முரணானது. 1:35 விகிதம்தான் இருக்கவேண்டும். அதுபோலவே, ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுடைய தரத்தையும் கூட்ட வேண்டும்.

ஆரம்பக் கல்வியில்தான் மாணவர்-ஆசிரியர் இருவகையினருக்கும் உள்ள பொறுப்பு அளவிறந்தது. இந்தக் கல்விப் பருவத்தில்தான் மாணவர்கள் எழுதும் பாங்கு, கூர்ந்து பார்க்கும் பார்வை, கவனத்துடன் கேட்டல், தேடுதல், சிந்தித்தல், படிக்கும்முறை, நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுதல் ஆகிய கற்கும் துறைகள் பலவற்றையும் கற்றுக் கொள்ளவேண்டிய நிலை உண்டாகிறது. கற்கும் நெறிமுறைகளில் கைவரப்பெற்ற மாணவர்கள் கல்வித் துறையில் பிற்காலத்தில் விரைந்து முன்னேறுவர். ஆதலால், ஆரம்பக் கல்வியில் பழக்கங்கள் படிந்து வழக்கங்களாக வளரக்கூடிய பருவத்தில் அதிகக் கவனம் தேவை. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒவ்வொரு மாணாக்கனாகக் கவனித்துக் கற்பிக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்ளவேண்டும்.

ஆரம்பக் கல்வியில் முதல் இரண்டு வகுப்புப் பாடப் புத்தகங்களின் எண்ணிக்கை குறையவேண்டும். புத்தகம்

கு.xv.3