பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/376

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்று சிலருக்கு இராமன்மீது இருக்கிற வெறுப்பெல்லாம் வான்மீகியால் வந்ததேயன்றி இராமன் மீது ஏதும் வெறுப்பில்லை.

எனக்குச் சமுதாயத்தின் நல்வாழ்வில் சற்று அதிகமான பற்றும் அக்கறையும் உண்டு. எனவே சமுதாயம் வாழ வழி வகுக்கும் இலக்கியத்தையே - சமுதாயத்தின் இன்றியமையாத் தேவையைப்பாடும் இலக்கியத்தையே இலக்கியம் என்று நான் கருதுகிறேன். எனவே கம்பனை எனது சமுதாயக் கண்ணோட்டத்துடனேயே நான் பார்க்கிறேன். கம்பன் அயோத்திமாநகரின் சக்கரவர்த்தியை மட்டுமா பாடிப் போனான் ?

கம்பனிடத்தில் ஒரு குல உணர்ச்சியைப் பார்க்கிறோம். உலகமே ஒன்று என்று அவன் கருதுகிறான். நிர்வாகத்திற்கும் ஆட்சி நலத்திற்காகவுமே எல்லைக் கோடுகள் பிரிவுகள் கற்பிக்கப் பெற்றுள்ளன. கம்பனுக்கு முன்னும் கூடத் திரு மந்திரம் புறநானூறு போன்ற இலக்கியங்கள் எல்லாம் ஒரு குலநெறியை - ஓர் உலகக் கொள்கையை வற்புறுத்தியுள்ளன. ஆனாலும் மனிதன் அவற்றைப் படித்தான் - ரசித்தான் - சீரணித்துக் கொள்ளவில்லை. "அன்பால் ஆதரவால் மனித குலம் வாழவேண்டும்" என்று போதித்த மாபெரும் தத்துவ மேதை கன்பூசியஸ் தோன்றிய கம்யூனிஸ்டு சீனா இன்று, மனிதனை மனிதன் அடக்கியாள வேண்டும். மனிதன்மீது மனிதன் ஊர்ந்து செல்லவேண்டும் என்ற எண்ணத்தால், ஆணவ வெறி கொண்டு போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் கிளம்பி யிருக்கிறது. நாம் என்ன நினைக்க முடியும்? கம்யூனி சத்துக்கும் - கம்யூஷியசின் அறநெறிக்கும்தான் தொடர் பில்லையே!

"ஒன்றைக் கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு, ஒற்றை ஆடையை ஒருவன் கேட்டால் அவனுக்கு இன்னொன்றையும் கொடு" என்று இயேசுநாதர்