பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/381

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

369


இராமனுக்கு முடிசூட்டுவதற்குத் தசரதன் முடிவு செய்தான். முடிசூட்டு விழாவிற்குரிய ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. அன்னை கைகேயிடம் இராமன் வாழ்த்துப் பெறப் போகிறான். கைகேயி மிகவும் நல்லவள். அவளைக் கெடுத்தது கூனியே உள்ளத்தால் கூனிக் குறுகியவள் கூனி. நாட்டு வழக்கிலே நாம் பார்க்கிறோம். உள்ளத்தால் கூனிக் குறுகிய கிழங்கள் புறங்கூறுதலையும் பொறாமை கொண்டு பேசித் திரிதலையும் இன்றும் நாம் பார்க்கிறோம். இத்தகையவர்கள் காலரா, பிளேக் நோய்களைவிடக் கொடியவர்கள். இலையிலே பல காய்கறிகள் இருந்தாலும்கூட எல்லாவற்றையும் நாம் சாப்பிடுவதில்லை. பார்த்துத்தானே சாப்பிடுகிறோம். அப்படித்தான் பக்கத்திலே நம்மைச் சூழ்ந்திருப்பவர் களையும் நாம் பார்த்துப் பழகவேண்டும். இதைத்தான், "சேரிடமறிந்து சேர்” என்றார்கள். கூனியின் போதனையால் கைகேயி மனந்திரிந்தாள். "இராமா! நீ காட்டுக்குப் போக வேண்டுமாம் - உன் தம்பி பரதன் நாடாள வேண்டுமாம். இது உன் தந்தையின் ஆணை” என்றாள். முடிசூடி, ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டிய எனக்கு ஆரண்ய வாழ்வா? நாடாள வேண்டிய நான் காடாள வேண்டுமா? என்று துளியாவது மனம் வருந்தினானா? இல்லை. வேறு என்ன செய்தான் ?

"அன்னையே! தாங்கள் கூறினால் நான் கேட்க மாட்டேனா? மன்னவன் ஆணை என்று ஏன் சொல்ல வேண்டும்? என் தம்பி பெற்ற வாழ்வு நான் பெற்ற வாழ்வன்றோ? என் தம்பி பெற்ற செல்வம் நான்பெற்ற செல்வமன்றோ? தங்கள் பணியினை நான் தலைபணிந்து ஏற்றுக் கொள்கிறேன். இன்றே இப்போதே கானகம் செல்லுகிறேன். விடை கொடுங்கள்” என்று கூறிப் பணிந்து காடு செல்லு கிறான்.

"மன்னவன் பணியன்று ஆயின்
நும்பணி மறுப்ப னோஎன்