பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/391

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

379



'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்ற தாயுமானாரின் சித்தாந்தம் சர்வோதயத்தின் முழுச் சித்தாந்தம் என்று கூறலாம்.

'தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை யழித்திடுவோம்' என்று பாரதி பாடினார். அந்தத் தனி யொருவன் யாராக இருக்க முடியும்? உரிமைகளைக் கேட்க வாயற்று, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வழியும் வலிமையும் அற்று மூலையிலே ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஒருவனைப் பற்றித்தான் பாரதி பேசுகிறார். அத்தகைய ஒருவனை நோக்கிச் சோறும் துணியும் போடும்படி செய்வதுதான் சர்வோதயம்,

தொண்ணுாற்றைந்து பேரின் வாழ்க்கை உரிமைகளை -அவர்களிடத்து உரமும் உறுதியும் இல்லையென்ற காரணத்தால் எஞ்சியுள்ள பேர் பறித்துச் சுகவாழ்வு வாழுகிறார்களே இந்நிலை இருக்கலாமா?

நமது பாரதத்தின் தலைமை அமைச்சர் நேரு அவர் களுக்கு நிலப் பிரச்னையில் மிகவும் அக்கறை இருக்கிறது. எனினும், கொசு கடித்தால் கூட 'புலி அறைகிறது - முதலை விழுங்குகிறது என்று கூப்பாடு போடுகிறவ்ர்கள் சிலர் இங்கு இருக்கிறார்கள். நமது இன்றைய அரசாங்கம், தேவைக்கு அதிகமாக நிலத்தைச் சேர்த்து வேலி கட்டி வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் இழப்புக்குரிய ஈட்டுப்பொருள் கொடுத்து நிலத்தைப் பெறுகிறது. இதிலேயே தனியுரிமை பறிபோகிறது என்று கதறுகிறார்களே!

நிலப் பிரச்னையைப் பொறுத்தவரை நாம் எவ்வளவு விரைவில் முடிவெடுக்கிறோமோ அவ்வளவு நல்லது. இல்லையானால், கிழக்குக் கோடி வீட்டில் தீப்பற்றி எரியும் போது மேற்குக் கோடி வீட்டில் வாழ்பவர் தன் வீட்டின்மேல் தண்ணீர் அள்ளிக் கொட்டிக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற