பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/392

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கதை போலவே ஆகும். புத்திசாலியாக இருந்தால், தீப்பிடித்த வீட்டில் தண்ணீரை அள்ளிக் கொட்டி அந்தத் தீயை அணைப்பதின் மூலம் எல்லா வீடுகளையும் காப்பாற்றலாம். அவனுடைய வீடும் காப்பற்றப் பெறும். மனித சமுதாயத்தில் எந்த ஒரு கோடியில் வறுமை இருந்தாலும் அது நம்மை அரித்துத் தின்றுவிடும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் எதற்கும் கும்பிடுபோட மிக நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், எதைக் குறிப்பிடுகிறோமோ அதனுடைய தத்துவத்தை மட்டும் வாழ்க்கையில் காப்பாற்ற மாட்டோம். புறக் காட்சிகளையும், புறத் தத்துவங்களையும் பார்த்து அவற்றை நம்முடைய வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும்.

காந்தியடிகளின் நினைவாக நாம் சத்தியம் செய்து உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் வலியுறுத்தி வந்த தத்துவங்களை - சித்தாந்தங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாகவாவது வாழ்க்கையில் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெறவேண்டும்.

சமய வாதி என்றால் நல்ல மணமுள்ள மலர்போல இருக்க வேண்டும். மலரின் மணத்தினாலாய இன்ப அனுபவம் மனிதர்களுக்கேயாம் - மலர்களுக்கல்ல. மலர் இருக்கும் செடி அனுபவிப்பது பலருக்கு அருவருப்பூட்டும் உரத்தைத்தான்; ரோஜா மலர் வண்ணத்தால் மணத்தால் பலருக்கு விருந்தளிக்கிறது; அதுபோலவே மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பம் அளிக்க வேண்டும். அது மனிதனின் கடமை. இதனை நமக்கு உணர்த்துவதுதான் சர்வோதயம்.

நாம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு தொய்வு ஏற்படவில்லை. இப்போது தொய்வு ஏற்படுமோ என்ற அச்சம் பிறந்திருக்