பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/393

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

381


கிறது. அந்த அச்சத்தைப் போக்கும் முயற்சியில் சர்வோதய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

நாம் பூரண சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டு மென்றால், சர்வோதய தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவது தவிர வேறு வழியில்லை. சமுதாய ரீதியதாக-சமய ரீதியாக-அரசியல் ரீதியாக அற்புதமான ஓர் விளக்கு சர்வோதயம். விளக்கைச் செய்து கொள்ள முடியாதவர்களாக நாம் இருக்கலாம். விளக்கைச் செய்து கொடுத்த பிறகு அந்த விளக்கை ஏற்றி, இருளைப் போக்கி விளக்கொளியில் வாழ முடியாதவர்களாக இருக்கலாமா?

காந்தியடிகளுக்குப் பிறகு, வினோபாஜி சர்வோதய இயக்கத்தின் தலைவராக விளங்குகிறார். இந்த 20-ஆம் நூற்றாண்டிலேயே வினோபாஜி நம்மிடையே வாழுகின்ற காலத்திலேயே காந்தியடிகள் காண விரும்பிய சர்வோதய சமுதாயத்தை - புதிய சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். நாம் அனைவரும் ஓரணியில் சேர்ந்து, அண்ணல் காந்தியடிகளுக்குக் காணிக்கையாக அவரது சித்தாந்தங்களை ஆண்டுக்கு ஒன்று வீதமாகவாவது எடுத்துக்கொண்டு நடைமுறைக்குக் கொணர முயற்சிக்க வேண்டும்.

19. அகிம்சை

"அகிம்சையை இன்றைய உலகம் ஏற்காது - ஏற்க முடியாது; ஒருவனை ஒருவன் அடுதலும் தொலுதலும் புதுவது அன்று; 'இவ்வுலகத்து இயற்கை என்று புறநானூறு பேசுகின்றது. எனவே உலகம் உள்ளவரை பிற உயிர்களைத் துன்புறுத்தல் - இம்சித்தல் இருந்தே தீரும்" என்று சிலர் சொல்லுகிறார்கள்.

உலகம் வளர்ந்து செல்லக்கூடியது. இன்று ஆங்காங்கு பல்வேறிடங்களில் அடி உதை கத்திக்குத்துகள் நிகழ்ந்த