பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/394

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போதிலும் அவை யாவும் முன்னைய அளவிற்கு - பண்டைக் காலத்தில் இருந்த அளவிற்கு இன்று இல்லை.

அன்றைய நிலையில் வாளை - கத்தியை இடையில் சொருகிச் செல்வது, மதிப்பிற்குரியதாகப் போற்றப் பெற்றது; இன்று பழிப்பிற்குரியதாகக் கருதப்பெறுகிறது.

வாளைச் செருகிக் கொண்டு செல்லவும் மனிதன் கூசுகிறான்.

மனைவியை அடித்து உதைத்து அடக்கியாளுவது இடைக்காலத்தில் ஆண்மகனுடைய - கணவனுடைய கவுரவமாக - வீரச் செயலாகக் கருதப்பெற்றது. இன்று வெறுத்து ஒதுக்கத்தக்க இழிநிலையாக எண்ணப் பெறுகிறது.

உழவனை அச்சுறுத்திச் சவுக்கால் அடிப்பது அன்றைய மிட்டா மிராசுகளின் செல்வாக்கைக் காட்டுவதாக இருந்தது. அச்செயல் இன்று யாரும் ஏற்க மறுக்கின்ற இழிசெயலாகக் கருதப்பெறுகிறது. இவையெல்லாம் காலத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள நற்பண்புகள். இம் முன்னேற்றம், ஏதோ திடீரென்று ஏற்பட்ட முன்னேற்றமன்று. அதாவது,

சிறு தம்ளரில் விரைவில் உயரும் நீர்மட்டம்போல் விரைவில் பெற்ற உயர் நிலையன்று. விரிந்து உயர்ந்த ஏரியில் துளித் துளியாக நீர் சேர்ந்து சிறிது சிறிதாக ஏற்றமடையும் நீர்நிலை போன்றது. மெல்ல மெல்ல உயர்ந்துவரும் இக்காலத்தில் அன்று பாடிய புறநானூற்றின் வேறு பல அடிகள் ஒத்துவந்தாலும் "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலுதலும்......இயற்கை?" என்ற வரிகள் எக்காலத்துக்கும் ஒத்துவருவன என்று எப்படிக் கொள்ள முடியும்? 'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலுதலும் புதுவதன்று' என்று கருத்து இன்று ஒத்துவருவதாக இல்லை.

'உலகப் பிரச்னைகள் எல்லாம் இன்று படை பலத்தால் தானே தீர்க்கப் பெற்றன? உலகமே படைபலத்தை நம்பி