பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/396

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



'அகிம்சையால் சாதித்தது என்ன ? அகிம்சை பேசிவரும் நாடு சாதித்த சாதனைகள் அனைத்துமே அகிம்சையை அடிப்படையாகக் கொண்டவைதாமோ? என்று கேட்கின்றனர்.

எந்த ஒரு செயலையும் இடம் பொருள் ஏவல்கட்கு ஏற்பவே, நல்லதா கெட்டதா என்று முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, நன்மை பயக்கும் ஒரு செயல், இடம் பொருள் ஏவல்கட்கு ஏற்ப தீமை பயப்பது போலத் தோன்றுவதும், தீமை பயப்பது போன்ற ஒரு செயல் இடம் பொருள் ஏவல்கட்கு ஏற்ப நன்மை பயப்பதும் உண்டு.

மனிதன் வாழும் வீட்டிற்குள் பாம்பு நுழைந்து அடுத்த வனைத் தீண்ட முயலும்போது அகிம்சை பேச முடியுமா? அடித்துக் கொல்லுதல்தானே மரபு? வீட்டில் புகுந்த பாம்பை அடித்துக் கொல்வது வழக்கம் என்ற எண்ணத்தில் காட்டிற்குள் புகுந்து புற்றினைப் பெயர்த்துப் பாம்புகளை எல்லாம் தேடிப் பிடித்து அடித்துக் கொல்வது சரியாகுமா? முன்னது கடமை வழிபட்ட அகிம்சை, பின்னது இம்சை.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது உடலைச் சுடுவது கடமை. அது இம்சையாகாது. சுடுவதை நினைவிற்கொண்டு உயிருடன் இருப்பவனது உடலைச் சுடுவது சரியாகுமா? எதற்கும் இடம் பொருள் ஏவல் காலம் உண்டு!

அகிம்சை வழி நிற்க வேண்டுமானால் படைகளே கூடாது. நம் நாட்டிலோ படைபலம் பெருக்கும் நிலை நிலவுகின்றது. இது ஒன்றே இன்றையச் சூழ்நிலையில் அகிம்சையை நிலைநாட்டமுடியாது என்பதற்கு சான்றாகாதா என்கின்றனர்.

இன்றைய உலகில் சிலர் எடுத்த எடுப்பிலேயே சண்டை போடுபவராக உள்ளனர். ஆயினும் அவர்களும்கூட தம் கை கண்ணில் குத்தும்போதும் தம் பல் நாக்கைக் கடித்துவிடும்போதும் அவற்றை நொந்து கொள்ளு-