பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/399

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

387


முடிவாக அணுஆயுதத் தடையும் போர் நிறுத்தச் சூழலும் உருவாகிவரும் இக்காலத்தில் உலகம் அகிம்சையை ஏற்று நடக்க இயலும். இன்றைய உலகத்திற்கு அந்த அகிம்சை நெறிதான் வழிகாட்ட முடியும்.

20. கதர்

காந்தியத் தத்துவம் என்ற மையக்கோட்டில் அரசியல் இருந்தது - அருளியல் தழுவிய அரசியல் இருந்தது. ஆன்மார்த்த சிந்தனைகளும் இருந்தன. இப்படி ஒரு தத்துவ கர்த்தாவை நாம் அடிக்கடி காண்பதில்லை. வள்ளுவத்தில் ஒரு குறை இருந்தது. அதுவும் காந்தியிடத்தில் இல்லை. அதுதான் விடுதலையுணர்வு. அதையும் காந்தி வற்புறுத்தினார்.

தமிழகத்திற்குச் சில பண்பியல்கள் உண்டு. எல்லா நாகரிகங்களிலும் சிறப்பியல்புகள் உண்டு. எனினும் வழிவழி நாகரிகம் பாழ்பட்டு நின்ற நமது பாரதத்திற்கு விடுதலை வாங்கித்தர அவர் கையாண்ட முறை புதியது - போற்றத்தக்கது. அன்றும் தமிழகத்தில் அகிற்புகை போன்ற துணிகளை உற்பத்தி செய்தமைக்காகப் பல கைத்தறியாளர்களின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டன என்று வரலாறு கூறுகிறது.

சுதந்திர நாட்டில் சுதந்திரமாகச் சிந்திக்க என்ன செய்ய முன்வரவேண்டும். விடுதலையுணர்வை உண்டாக்க முதலில் பொருளியல் விடுதலை வேண்டும்.

காந்தியத் தத்துவம் ஒரு செயல் செய்தால், பலவற்றையும் ஒருங்கே திருத்தும் ஒரு சக்தி வாய்ந்தது.

கதர் நூற்றால், ராட்டைச் சுற்றினால் சுதந்திரம் வந்து விடும் என்றார் காந்தி. சேர, சோழ, பாண்டியர் காலத்தில் பொழுது போக்குக்காக, விளையாட்டாக நாடு பிடித்திருக்