பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிறார்கள் வெள்ளையர்கள். நாடு பிடித்ததின் நோக்கம் தங்கள் உற்பத்திகளை இங்குக் கொண்டுவந்து விற்பதற்குத் தான். 'என் நாட்டுப் பொருளாதாரத்தை வெள்ளைக்காரன் சுரண்டுவதைத் தடுக்கிறேன்' என்ற உணர்வோடு ஏழை மனிதன் கதர் வேட்டியைக் கட்டும் போது எண்ணுவான்; காந்தியடிகள் மனப்புரட்சியை உண்டாக்கினார். அவரது போராட்டம் ஆதிக்க எதிர்ப்பே அன்றி ஆள் எதிர்ப்பல்ல. அங்கே அரசியல் ஒழுக்கத்தை மனித ஒழுக்கத்தைப் பார்க்கிறோம். காசில்லாமல் போகலாம் - கைகள், கால்கள் இல்லாமல் போகாதே. எனவே நூற்றுக் கட்டிவிடலாம் என்ற பொருளியல் உணர்ச்சியை இந்த கதர் மூலம் காண்கிறோம். நிர்மாண இயக்கங்களாக தீவிர அரசியல் ஊழியர், தீவிர நிர்மாண ஊழியர் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படலாம். வசதியுடையவர்கள் - வாய்ப்பு உடையவர்கள் - கையுடையவர்கள் எந்த ஆட்சியிலும் வாழ்ந்துவிடுகிறார்கள்; வாழ்ந்துவிடுவார்கள். எதிலும் மிதக்கத் தெரிந்தவர்கள் யார் ஆண்டாலும் மிதக்கக் கற்றுக் கொள்வார்கள். காந்தி சாதாரண மக்கள் வாழ விரும்பினால் நகரம் என்ற கரையான் பல கிராமங்களை அரித்துச் சாப்பிடுகிறது. கிராம மக்கள் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள். அவர்கள் கிராமிய ரீதியிலே ஒரு பெரு எழுச்சியை உண்டாக்க வேண்டும்.

குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி என்பது மட்டுமல்ல நமது பிரச்னை. எவ்வளவு அதிகப்படியானவர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க முடியும் என்பது தான் - பலருக்கு வேலை வாய்ப்பில்லை - வேலை செய்ய சக்தியுள்ளவர்கள் பலர் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்குப் போகும் நிலையில் உள்ளதை மாற்றியாக வேண்டும். இம்முயற்சியில் பொருளாதார இலாகா நட்டத்தைப் பார்க்க முடியாது. அறம் அருள் என்றும் தீமை செய்தாலும் பொறுத்துக்கொள் என்றும் கூறிய வள்ளுவர்,