பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/401

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

389


"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு”

என்கிறார். ஆம், கீழ் மக்கள் தமது கன்னத்தை நொறுக்கும் வளைந்த கைகளையுடையவர்க்கல்லாமல் மற்றவர்களுக்குத் தாம் உண்டு கழுவிய ஈரக்கையையும் உதறமாட்டார்கள். எச்சிற்கையால் காக்கைகூட விரட்ட மாட்டார்கள்.

இன்றைய பொருளாதார நிலை நாட்டிற்கு ஆபத்து. வறுமையிற் செம்மை என்று நாம் கூறியிருக்கிறோமே தவிர வளமையில் பங்கு கொடு என்று சொல்லக் கூசியே வாழ்ந்து வந்திருக்கிறோம். சராசரி மனிதர்களுக்கு மேல் வாய்ப்புக் கொடுக்க முற்படவேண்டும்.

அரசாங்கம் வேலை கொடுப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்க முடியுமே தவிர, அரசாங்கமே வேலை கொடுக்க முடியாது. உற்பத்தி இங்கு பெருகி இருக்கிறது என்றாலும், அது பரவலாக எல்லோரிடமும் சென்று சேரவில்லை என்ற குறைபாடு இன்று இருக்கிறது. உழைப்பது கடமை - தேவையைப் பெறுவது உரிமை. உரிமை என்ற கடமை உணர்ச்சிதான் சிறந்தது. பசி என்ற கொடுமையை உடனடியாக அழிக்க வேண்டும். அது தான் சிறந்த அறம் - தர்மம் பசிக்கொடுமை, வறுமையைப் போக்க அது கொடுத்து மாளாது. எனவே வாழ்வதற்கான வழிகளைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும். அதற்குத்தான் சர்வோதய சமுதாயம் - சமத்துவ சமுதாயம் என்றெல்லாம் பெயர்.

கையால் நூற்கின்றபோதும் நெய்கின்ற போதும் அவர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அந்த உடைகளை நாம் உடுத்தும்போது அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு இருக்கும். கதர் வாங்கினால், காசு கொடுத்துக் கருத்தையும் வாங்கினதாகக் கூடக் கூறமுடியும். எண்ண வலிவுக்கு இருக்கும் ஆத்மசக்தி சாதாரணமானதல்ல - நம்முடைய தேசத்தின் சின்னமாக - இந்தியக் குடிமக்களின்