பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/407

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

395


அத்தகைய சூழ்நிலையை மீண்டும் அமைத்தல் நலமாகும். தாழ்மையுற்றவர்கள் அவமானமுற்றவர்கள் இவர்களின் மனப் புண்களை ஆற்றவேண்டும். இப்படிப்பட்டவர்கள்தான் போர் உணர்ச்சியை வளர்ப்பார்கள். இவர்களிடத்தில் இன்பம் இல்லாத காரணத்தால். வெஞ்சினந்தான் இவர்கள் உள்ளத்தில் அரசு செலுத்தும். அதைத் தவிர்க்க நாம் எழ வேண்டும்”

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும், திருவீழிமிழலையில் ஆற்றிய தொண்டும் இதுதானே? ஒன்றுமில்லாத வறுமைநிலை வரையில் இளையான்மாரர் செய்த திருத்தொண்டும் இதுதானே? மணிமேகலை மனித சமுதாயத்திற்குச் செய்த சேவையும் அதுவேயன்றோ?

சமுதாயமும் நாமும்

நாம், சற்றேறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன் தோன்றி அருள் வளம் பழுத்து வளர்ந்ததொரு சமய நிலையத்தின் தலைமைப் பொறுப்பைத் தாங்கி நிற்கும் தொண்டர். தமது ஸ்தானத்துக்குரிய கடமை மக்கள் மன உணர்ச்சியைக் காத்து நல்லற வாழ்வுத் துறையில் அழைத்துச் சென்று, பக்தியுடன் கலந்த சமயப்பெரு வாழ்வு வாழச்செய்தலாகும். இத் திருப்பணியை நமது முன்னவர்கள் அவ்வக்காலத்திற்கு உகந்த முறையில் திறம்படச் செயலாற்றி வந்துள்ளனர். இன்றோ சமய நிலையமும் கூட மக்களொடு வழக்காடுவதற்கு நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலையில் மக்கள் மனம் அமைந்துள்ளது. அறநிலையங்களிடத்தில் மக்கள் காட்டிவந்த மதிப்பும் அனுதாபமும் அந்த அளவுக்கு மாறி நிற்கின்றது. தனி மனிதன் வாழ்விலேயே காவலை பாரதியார் வெறுக்கின்றார். எனினும் சமுதாயத்தைத் தலைமை வகித்து அழைத்துச் செல்லக்கூடிய சமயத் தலைவர்களும்கூட காவலோடு உலவ வேண்டிய அளவுக்கு அற உணர்ச்சியும் சமயப் பண்பாடும் கெட்டுள்ளது. எனவே இன்று நம்முடைய முதலாய தொண்டு சமுதாயத் துன்பத்தைத்