பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/413

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

401


கோபப்படுகிறார் - 'வாழ்வதும் வானவர்கள் தாம் வாழ' என்ற வரி மூலம் மணிவாசகரும் தேவர்கள் மீது ஆத்திரப்படுகிறார். சாவதற்குரிய துன்பங்களை ஏற்று வாழ்பவர்கள் என்றும் வாழ்வர். "விண்ணோர்கள் அமுதுண்டும் சாவர், சிவபெருமான் நஞ்சுண்டும் சாகார்" என்கிறார் இளங்கோ அடிகள்.

நமது பன்னிரு திருமுறைகள் வேதம் என்ற அளவோடு மட்டும் இல்லை; மனித சமுதாயத்தின் வாழ்க்கை நெறி பற்றியும், பேசுகின்றன. புறச்சமயச் சடங்குகளை அப்பரடிகள் சாடிய அளவிற்கு வேறு யாரும் சாடியதில்லை. இருபதாம் நூற்றாண்டின் சமுதாய அமைப்பை - தேவையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் பேசினார்.

இறைவன் சந்நிதியில் பாடப்பெற்ற பாடல்கள் திருமுறைப் பாடல்கள்; திருமுறை பாடிய பெரியார்கள், இறைவன் சந்நிதியில் உலக விளையாட்டைப் பார்த்தார்கள். உலக மக்களின் இன்ப துன்பங்களைப் பார்த்தார்கள். எல்லா உலகமும் ஆனாய் நீயே என்று இறைவனிடத்திலேயே சொன்னார் அப்பரடிகள். நாட்டிலும், வீட்டிலும் மக்களிடத்திலும் சொல்லவேண்டிய செய்திகளை யெல்லாம் இறைவனிடத்துச் சென்று இறைவனையே சாட்சியாக வைத்துச் சொல்லுவது போலச் சொல்லியிருக்கிறார்கள்.

அப்பரடிகள் தோன்றிய காலம் சங்க காலத்தை விட மிகச் சிக்கலான காலம்; சமயப் பயன் மிகுந்திருந்த சங்க காலத்தில் சமயத்தைப் பற்றி அதிகம் பேசவேண்டி நிலை இல்லாமல் இருந்தது. சங்க காலத்திற்குப்பின் போரும் போர் உணர்வும் இருந்தன. போர் உணர்வில் வளர்ந்தவர்கள், போர் இல்லாதபோது தமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஒரு சமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் மூவேந்தர்களும் கூடிப் பேசியிருக்கிறார்கள். ஒருவன் ஒருத்தி என்ற ஒழுக்க நெறிக்கு ஊறு