பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/418

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போற்றப்படும். ஆம், சமுதாயத்திற்குக் கேடு பயக்காத - சமுதாயத்தை அரித்துத் தின்னாத தனிமனித உரிமைகள் தெய்வச் சிலைகளைப் போல தூய்மையாகப் போற்றிக் காப்பாற்றப்படும். இதுதான் இந்த நாட்டின் பொதுவிதி. இதற்காகத்தான் இந்த நாடு சுதந்திரம் பெற்றது.

"இந்த நாட்டில் இருக்கிற எல்லா மக்களும் சாதி, இன, மொழி, மத, கட்சி வேறுபாடுகளின்றி எல்லாவிதமான உரிமைகளையும் இந்த நாட்டில் பெறுவார்கள்” என்பதுதான் நமது அரசியல் சாசனம் - அரசியல் வேதம். அரசியல் சாசனம் வழங்கிய இந்த தனிமனித உரிமையை இனி, இந்த உலகத்தில் யாராலும் பறிக்க முடியாது என்றாகி விட்டது. இனி தனி மனித உரிமைக்கு ஆபத்து வரப்போவதேயில்லை. ஆனால், தனிமனிதன் திறமையினால் - போட்டியினால் - வலிமையினால்- வாய்ப்பினால் சமுதாயத்தினுடைய பெருவாரியான உரிமைகளை வாரிச்சுருட்டி முடக்கிக் கொள்ளுவதை அனுமதிக்க முடியாது.

நம்முடைய சுதந்திர நாட்டில் தனிமனித உரிமை போற்றிப் பாதுகாக்கக் கூடியது. ஆனாலும், சமுதாய உரிமைக்குக் கேடுவரும்போது தனிமனித உரிமையைப் புறக் கணித்துச் சமுதாய உரிமைக்குத்தான் முதன்மை தருவோம் - தரவேண்டும் - அதுதான் நியதி - அதுதான் நியாயம் - அதுதான் ஒழுக்கம் - அதுதான் தருமம் - அதுதான் கடவுளின் நெறி!

24. எழுத்தாளர் கடமை

மனிதர்கள் உணர்ச்சிகளின் நிலைக்களன்; உணர்ச்சி உயர்வையும் தரும்; தாழ்வையும் தரும். உயர்வும் தாழ்வும் வருவதற்கு உணர்ச்சியே பொறுப்பல்ல. உணர்ச்சியைப் பற்றி நிற்கின்ற அறிவுச்சார்பே காரணம். அறிவே முழுக்க முழுக்கக் காரணம் என்று கூறிவிட முடியுமா? அறிவையும் ஆட்சி