பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/427

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

415


மன்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது என்பது உண்மைதான்; இதில் ஐயத்திற்கு இடமில்லை என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

ஆனால், பிரிவினை சக்தி பிரமாதமாக வளர்ந்துவிட்டதே என்று நாம் மனத்தளர்ச்சி கொள்ளும் நிலை எதுவும் இல்லை. காரணம், இந்திய ஒற்றுமை உணர்வும் ஆற்றல் பெற்று வலிவுடையதாகத்தான் இருக்கிறது. ஆனால், நல்லது நிகழவேண்டும் என்பதற்காக இதில் அதிக அளவிற்கு நம்பிக்கை வைக்காமல் இருக்கலாம். பயனளிக்கும் விதத்தில் பாரத ஒற்றுமை சக்தியைப் பலப்படுத்த நமது எல்லா ஆற்றலையும் ஒருங்கு திரட்ட வேண்டும்.

மொழிப் பிரச்னை இந்திய ஒற்றுமையைச் சிதைக்கும் முக்கியமான பிரச்னை என்பதை யாராலும் மறுத்துக் கூற முடியாது. தங்களின் நாகரிகப் பண்பாட்டில் தாய்மொழியில் மோகித்து இருப்பதும் நம்பிக்கை வைப்பதும் மனித இயல்பேயாகும்.

ஆகவே, இந்திய ஒருமைப்பாட்டை விரும்பும் நாம் துரபிமானம் இன்றி எவருக்கும் கேடு இல்லாத வகையில் மொழிப் பிரச்னையை அணுகியாகவேண்டும். இயற்கையை எதிர்க்கும் எந்த நடவடிக்கையும் பயனளிக்காது. மாறாகத் தோல்வியைத்தான் அணைக்கும். அதுவே, மாநில அரசும் மத்திய அரசும் பிரதேச மொழிகளை எல்லா வகைகளிலேயும் முன்னேறச் செய்ய தீவிரமான நடவடிக்கைகள் மேற் கொண்டாக வேண்டும்.

குறிப்பாக உங்களின் கருணை வாய்ந்த கவனத்திற்கு ஒன்றைக்கூற விரும்புகிறோம். இந்தி மொழி தங்கள் மீது திணிக்கப்படுமோ என்ற அச்ச உணர்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் பரந்து பரவி இருக்கிறது. அதிக அளவுக்கு இந்தி மொழியைப் பயன்படுத்தியாக வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சமும், அதன் விளைவாக மற்ற மாநில மொழி