பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

31


கற்க-சிறப்புறக் கற்கக் கணிதக் கல்வி இன்றியமையாதது. ஆதலால் கணிதக் கல்வி ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.

மானுடம் கல்வியில் வளர்ந்து வாழும் நிலையில் கல்வித்துறை பலவாக விரிவடைகிறது. விரிவு, வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் புறநிலை ஆய்வுகளிலிருந்தும் நிகழ்கின்றன. இங்ஙனம் கல்வி இயல், இசை, நாடகம் என முதல் நிலையில் விரிவடைந்தது. பின் இயற்பியல், உயிரியல், வேளாண்மை இயல், கால்நடையியல், வேதியியல் என்றெல்லாம் வளர்ந்து வருகின்றது. விரிவடைந்து வருகின்றது. மேலும் விரிவடையும். இங்ஙனம் கல்வி, பல்வேறு துறைகளாக வளர்ந்தாலும் அவற்றுள்ளும் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் நாம் சிறந்து விளங்குவது நாட்டிற்கு நல்லது. இன்று உலகத்தை நாளும் இயக்கி வளர்த்து எடுத்துச் செல்லும் பொறுப்பை அறிவியல் சார்ந்த தொழில்நுட்பமே செய்து வருகிறது. இனி எதிர்வரும் காலங்களில் அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்திற்குரிய இடம் நிலையானது; பயனுடையது; சிறப்புடையது.

தொட்டி மீன்கள்

உணர்வுபூர்வமான சமுதாய அமைப்புத் தோன்றுதலுக்குக் காரணமாகவும் கல்வி அமைகிறது. மனித சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி அடிப்படை சமுதாய நலனுக்குரிய குணங்கள் தோன்றவும் வளரவும், பண்பு இடம் பெறவும் மனிதன் பெறும் கல்வியே துணை செய்கிறது. தான் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு முன்னேறத் துணை செய்வது அவன் பெறும் கல்வியேயாகும். "உலகம் தழீஇயது ஒட்பம்" என்று திருக்குறள் கூறும். கடந்த பல நூறு ஆண்டுகளாகவே நமது நாட்டில் சமுதாய உணர்வு மங்கி மறைந்து வந்துள்ளது. இந்தக் குறை படித்தவர்களிடம் மிகுதியாக இருந்தது; இருந்து வருகிறது. மெத்தப்படித்தவர்கள் தான் மிகவும் கெட்டுப்போயினர். இன்று அந்தக் குறை வளர்ந்து பெரும்பாலோர் தொட்டி மீன்களாகிவிட்டனர். அதாவது தொட்டியில் வளர்ந்த மீன்கள் கடலில் விடப்