பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/431

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

419


விண்ணப்ப பாரங்களிலும் தஸ்தாவேஜிகளிலும் எந்த சாதியைச் சேர்ந்தவர், எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்று கேட்கப்படும் முறை நீக்கப்பட வேண்டும். எந்த சாதி எந்த வகுப்பு? என்று கேட்கும் இடத்தில் மேற்கண்ட கேள்விகளுக்குப் பதிலாகப் பொருளாதார நிலை, கல்வித் தகுதி, சமூக நிலையில் மனுதாரர் தாழ்ந்தவரா? - என்று கேட்கும் வண்ணம் முறையை மாற்றியமைக்க வேண்டும்.

எல்லாத் தேர்தல்களிலும் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் சாதி சமயக் கோட்பாடு, சமயத் தத்துவம், நிறம் ஆகியவற்றிற்கு முதன்மையளிக்காமல் தங்களின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாதியின் அடிப்படையிலோ அல்லது வகுப்பின் அடிப்படையிலோ சங்கம் அல்லது அமைப்பு எதுவும் இருக்கக்கூடாது என்று சட்டமியற்ற வேண்டும்.

சாதியைப் பற்றியோ வகுப்பைப் பற்றியோ எழுதுதற்கும் பேசுதற்கும் மற்ற சாதி அல்லது வகுப்பை எதிர்த்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் யாருக்கும் எந்த அமைப்பிற்கும் - பத்திரிகைகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது.

கல்வி வல்லுநர்களும் சமயவாதிகளும் ஒன்று கூடிக் கலந்தாலோசிக்க வேண்டும். சாதி வேற்றுமைகளையும் வகுப்பு உணர்வுகளையும் மறக்கும் நோக்கத்தில் பொது மக்களை ஓர் இடத்தில் கூட்டி, அங்கே தீவிரமான பிரச்சாரத்தாலோ அல்லது தொகுதி தொகுதிகளாகப் பிரித்து நடைமுறை வேலைகளில் ஈடுபட்டோ வகுப்பு வாதத்தையும் சாதீயத்தையும் தடுத்த நிறுத்த மத வாதிகளும் கல்வி வல்லுநர்களும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

மக்கள் மத்தியில் ஒருமை உணர்வை உண்டாக்குவதே தத்துவ ரீதியாக மதத்தின் முதன்மையான குறிக்கோளாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில காலங்களில் கண்மூடித்