பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/432

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தனமான பிடிவாத குணத்தால் சமய ஆக்கிரமிப்பைப் பொது மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

வெற்றிகரமாக விடுதலை வாங்கித்தந்த நமது பக்திக்கும் விசுவாசத்திற்கும் பாத்தியமான 'இந்தியாவின் தந்தை' அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு மத சிந்தனையுடைய மக்கள் ஒற்றுமையை நோக்கித்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

சமயப் பிடிவாதத்தின் காரணமாகத் தற்கால இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டில் குலைவு ஏற்படுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், அதே நேரத்தில், சமயத்தின் மூலமாகத் தேசிய ஒருமைப்பாட்டை உண்டாக்குவதில் கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்த வேண்டும்; தேசிய ஒருமைப்பாட்டிற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்.

அதற்கு, கீழ்க்கண்ட வழிமுறைகள் ஆலோசிக்கப் படலாம்.

எல்லா மதத் தலைவர்களையும் சமய உணர்வு கொண்டவர்களையும் கொண்ட மன்றம் ஒன்று ஏற்படுத்தி, பொது மேடையில் அவர்கள் ஒருங்குகூடி மதவிளக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அண்ணல் காந்தியடிகள் நடத்திக் காட்டியதைப்போல எல்லா மதத்தினரும் கலந்துகொள்ளக்கூடிய பொது வழிபாடு நடத்தவேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி மனிதரின் அடிப்படை உரிமைகளுக்குக் கேடு விளை விக்காத வகையில் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மதம் மாறிச் செல்வதை, சட்ட ரீதியாகத் தடுத்தாக வேண்டும்.

மற்ற மதத்தை எதிர்த்தோ அல்லது குற்றம் குறை கண்டுபிடித்து அபிப்பிராயம் கூறும் விதத்திலோ போதனை