பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/445

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

433


லாப நோக்கமின்றி நுகர்வுப் பொருள்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தனி ஒருவன் கூடப் பட்டினியால் சாக அனுமதித்தல் கூடாது. அறியாமை, முற்றாக அகற்றப்படுதல் வேண்டும். விரைவில் உலகம் தனக்கு ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலக மொழியை உலக மாந்தர் அனைவரும் கற்றுப் பேச வேண்டும். விரைவில் கடவுள் - மானுடம் தழுவிய உலகப் பொதுச் சமயமும் ஒன்று கண்டாக வேண்டும். இதற்கு வழி வகுப்பதற்கு வாய்ப்பாகப் போற்றுதலுக்குரிய போப்பாண்டவர், திருச்சபைகளுக்குப் பல சமயங்களுடன் விவாதித்தல், கலந்துரையாடல், தெளிவு காணல் நெறியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது வரலாற்றின் திருப்புமையம்! போதும், போதும் பிரசாரங்கள்! மாந்தர்களிடையே அடிக்கடி கூடுதல், கலந்துரையாடல் முதலியன நிகழட்டும்! அமைதிகாண வழி இதுவே! அமைதியை வளர்ப்போம்! காப்போம்!

29. அணிதிரள்க

இன்றைய மானுட உலகம் வேண்டி நிற்பது அமைதியை சமாதானத்தை! அமைதி சமாதானம் என்பவை இன்றைய பாரதத்தில் அருமையாகிவிட்டன! எங்கும் வெறுப்பு! பகை! கலகம்! வன்முறைக் கொடுமை! 1990-ல் மட்டும் 36500 கொலைகள் நடந்துள்ளன. இவை தவிர கலகங்களால் செத்தவர்களும் உண்டு. இந்த பூமியின் பல்வேறு பாகங்களில் ஏற்பட்ட திடீர் யுத்தங்கள், சண்டைகள், தீவிரவாத இயக்கங்கள் இவற்றால் உலகமும் அமைதியை இழந்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் திருவருள் பேரவையின் பணிகள் கடினமாகியுள்ளன. கட்டாயமாகியுள்ளன. சுதந்திர இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு குலம்; ஓர் இனம் எல்லாம் இந்தியர் என்ற மரபைப் போற்றுவோம். இந்திய