பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/446

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மக்களாகிய நாம் பாஸ்பரம் நல்லெண்ணம், நம்பிக்கையுடன் ஒன்றுபட்டு வாழ்வோம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது விழுமிய கொள்கை; நாகரிகம். நமது அரசு, சமயச் சார்பற்ற அரசு, சமயச் சார்பற்ற தன்மை நமக்கு கிடைத்த நாகரிகமாகும்; கபீர்தாஸ், விவேகானந்தர், நாராயணகுரு, வள்ளலார், அண்ணல் காந்தியடிகள் ஆகியோர் தங்கள் இன்னுயிரையும் கொடுத்துக் காப்பாற்றிய கொள்கை சமயச்சார்பற்ற தன்மை; இந்திய ஒருமைப்பாடு!

இந்தியா சுதந்திரமடைந்து அரைநூற்றாண்டு கூட முடியவில்லை. அதற்குள் நாட்டின் பல பகுதிகளில் "மண்ணின் மைந்தர்" கொள்கை இயக்கம்! பிரிவினை வாதம்! சாதிச் சண்டைகள்! மதச் சண்டைகள்! காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் இன்று பதற்றநிலை! இந்தச் சூழ்நிலையை அறை கூவலாக ஏற்றுக்கொண்டு அன்பையும் நல்லிணக்கத்தையும் ஒருமை நிலையையும் மக்களிடத்தில் வளர்த்து அமைதியையும் சமாதானத்தையும் வழங்கும் கடப்பாடே திருவருள் பேரவையின் கடப்பாடு! தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாகப் பாதுகாக்க திருவருட் பேரவை இயற்றிய பணிகள் செய்த தியாகங்கள் அளப்பில. தமிழக மக்கள் திருவருட் பேரவைக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்; அமைதிப் பணிக்கு அழைக்கின்றனர்; ஆயினும் நமது பணி மேலும் சிறப்பாக நடக்க முடியும்; நடக்க வேண்டும்.

இன்னும் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் அமைதியை, சமாதானத்தைக் காண உழைக்கும் நாம் தஞ்சையில் கூடுகிறோம். சமாதானத்தை வளர்க்க அணிதிரள்வோம். இந்த பூமியை அமைதியான, சமாதானச் சூழ்நிலையில் வைத்துக்கொள்ள உழைப்போம்! திருவருட் பேரவை வாழ்க! வளர்க அதன் அமைதிப்பணி!

கடவுள் பெயரால் சப்தமேற்போம். கடவுள் திருநாமத்தின் பெயரால் மாந்தர் ஒரு குலம் என்பதை உறுதிப்படுத்து