பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/447

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

435


வோம்! இந்த வையகத்தில் அமைதியான வாழ்க்கையை உறுதிப்படுத்துவோம்!

30. அமெரிக்கா தமிழ்நாடு அறக்கட்டளைப் பொழிவு

(TNF inc, USA)

பதினாறாம் ஆண்டு நிறைவு விழா
25–5-61

இனிய அன்புடையீர்,

நாட்டிடைக் கடந்தும், கடலிடைக் கடந்தும் அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய தாய்த் தமிழகத்தின் வளர்ச்சி பற்றிக் கவலையுணர்வுடன் எண்ணிச் செயற்பட முனைந்த உள்ளங்களுக்கு ஆயிரம் ஆயிரம் பாராட்டுக்கள்! நன்றி!

தமிழகம் காலத்தால் முந்தியது. தமிழினம் காலத்தால் முன் தோன்றி மூத்த இனம். செப்பமான மொழியும் சிறப்புடைய வாழ்வியலும் கண்டவர்கள் நமது முன்னோர். உலகப் பொதுமறையாக விளங்கும் தகுதி மிகுதியுமுடைய திருக்குறளைத் தந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியது தமிழரின் சிந்தனை உலகம். சிந்தனையிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். அதுபோலவே, வாணிகம் முதலிய துறைகளிலும் சிறந்து விளங்கிய பெருமையை வரலாறும் தமிழிலக்கியங்களும் எடுத்துரைக்கின்றன. ஆயினும் என்? இத்தகு புகழ் பூத்த வாழ்க்கை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வாழ்க்கை காலப்போக்கில் தமிழர் தம் வாழ்க்கையில் அயல்வழக்குகள் ஊடுருவியதன் பயனால் காதல் மறைந்தது; காமம்