பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/448

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தலையெடுத்தது; வீரம் விலை போனது; கோழைத்தனம் குடி புகுந்தது; சமயநெறிகள் மறைந்து மதங்கள் தலையெடுத்தன; பல கடவுள் வழிபாடு அறிமுகப் படுத்தப்பட்டுத் தமிழர் வாழ்வு நலியத் தொடங்கியது.

தமிழினம், குலமரபு கண்டு தழைத்து வளர்ந்தது. அயல் வழக்கால் சாதிகள், தீண்டாமை போன்ற சமூகத்தை உருக்குலைத் தழிக்கும் புற்றுநோயனைய சமூகத் தீமைகள் ஊடுருவின. இனவழிப்பட்ட கட்டுமானம் - ஒருமைப்பாடு சீர்குலைந்தது. அறிவறிந்த ஆள்வினையைத் தமிழர்கள் இழந்தனர். அதிர்ஷ்டத்தை - விதியை நம்பத் தலைப்பட்டனர்; வீழ்ச்சி தலைப்பட்டது; ஆட்சிகள் கவிழ்ந்தன. வீழ்ச்சியின் வரலாறு தொடர் கதையாகி வருகிறது. இனிய அன்புடையீர், மிகக்கடுமையான தடுப்பு முறையின் மூலம்தான் தமிழ் நாட்டைத், தமிழ் இனத்தைக் காப்பாற்ற முடியும். அத்தகைய உயர் முயற்சிக்குரிய விவேகமும் ஆற்றலும் உடைய தங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

இன்றைய தமிழகம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் பரிசுச் சீட்டுக்களில் 70% விற்பனை தமிழ்நாட்டில்தான். திரைப்பட அரங்குகள் 2500க்கு மேல் உள்ள நாடும் தமிழ்நாடுதான். உலக நாடுகளிலேயே பகலும் இரவும் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு தமிழ்நாட்டில் தான் உள்ளது! எங்கும் ஒருவிதமான சோம்பல்! அதே போழ்து சுகவாழ்வு வேட்கையும் மிகுதி. முரண்பட்ட வாழ்நிலை! இவ்விதமான இரண்டு எதிர்த்திசை வளர்ச்சிப் போக்கை நாம் ஆழ்ந்த கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி கூடிக்கொண்டு வருகிறது. 1981இல் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 48 கோடியாகும். 1991இல் 57 கோடியாக