பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

33


பாபரின் படையெடுப்பு வரலாற்றில் அளவுக்கு அதிகமாகவே பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்கு முஸ்லீம்கள் படையெடுப்பாளர்களாகத்தான் வந்தார்களா? அல்லது வர்த்தகம், கலாசாரப் பரிவர்த்தனை அடிப்படையில் வந்தார்களா? என்று தெரியாது. இந்தியாவிற்கு முஸ்லீம்கள் முதன் முதலில் வியாபாரத்துக்கே வந்தார்கள்; கலாசாரப் பரிவர்த்தனை நடந்தது. எனவே, இந்திய முஸ்லீம்களின் வாழ்க்கைக்கும் படையெடுத்து வந்தவர்களான கோரி, பாபர் முதலியோருக்கும் சம்பந்தம் இல்லை என்பது அறிஞர்கள் கருத்து. இது வரலாற்றில் பேசப்படவில்லை.

தீண்டாமையை எதிர்த்து வழிபாட்டுரிமை கேட்டு கி.பி. ஆறாம் நூற்றாண்டில் திருநாளைப்போவார் போர் தொடுத்திருக்கின்றார். இந்தச் செய்தி, தமிழ்நாட்டு வரலாற்றில் இடம் பெறவில்லை. திருநாளைப்போவார் வரலாறு, வரலாற்றில் எழுதப்படாதது மட்டுமன்று. பின்வந்த இலக்கியங்களிலும் கூடப் பரவலாகப் பேசப்படவில்லை. ஏன்? உயர் சாதி மனப்பான்மையில் இருட்டடிப்புச் செய்துள்ளனர். திருநாளைப்போவார் வழிபாட்டுரிமைக்காக ஒரு போரே நடத்தியிருக்கிறார். அன்று கொழுத்து வளர்ந்திருந்த புரோகிதர்களின் ஆதிக்கம் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த கடவுளைக் கட்டுப்படுத்திவிட்டது போலும்! திருப்புங்கூரில் கடவுளால் கூட நந்தனாரைத் திருக்கோயிலுக்குள் அழைத்துக் கொள்ள முடியவில்லை. இறைவன் நந்தனாரைக் காணப் புரோகிதர்களின் கட்டுக்காவலைக் கடந்து வெளியே வர இயலவில்லை. நந்தியைத்தான் சற்று விலகும்படி சொல்ல முடிந்தது. இந்த வரலாறு அப்படியே கடவுளைப் பாதிக்குமா? பாதிக்காது. சமுதாயம் கடவுள் பெயரால் செய்யும் கொடுமைகளின் நிலை! திருநாளைப்போவார் வரலாறு உள்ளவாறு நமது நாட்டுக் கல்வித் திட்டத்தில் இடம்பெற்றிருந்தால்